பெஃபி தமிழ்நாடு விருதுகள்-2025 நிகழ்வில், தலைவர் திரு. கமல் ஹாசன் M.P., அவர்கள் பங்கேற்பு.

23 டிசம்பர், 2025

பெஃபி தமிழ்நாடு விருதுகள்-2025 நிகழ்வில், தலைவர் திரு. கமல் ஹாசன் M.P., அவர்கள் பங்கேற்பு.

PHYSICAL EDUCATION FOUNDATION OF INDIA, MINISTRY OF YOUTH AFFAIRS AND SPORTS மற்றும் கமல் பண்பாட்டு மையம் இணைந்து நடத்திய பெஃபி தமிழ்நாடு விருதுகள்-2025 நிகழ்வு,

பெஃபி தமிழ்நாடு மாநில பிரிவு தலைவரும், ரோட்டரி இன்டர்நேஷனல் இயக்குநருமான திரு. Rtn AKS Er Muruganandam M @mmmtrichy அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்கள்,

விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் சிறந்த விளையாட்டு சாதனையாளர்களுக்கு, EXCELLENCE OF PHYSICAL EDUCTION AND SPORTS விருதை வழங்கி கௌரவித்ததுடன், விளையாட்டு வீரர்களின் சாதனை மற்றும் பெருமை குறித்தும், விளையாட்டு இளம் தலைமுறையினரை எவ்வாறு ஊக்கப்படுத்துகிறது என்பது குறித்தும் விளக்கிச் சிறப்புரையாற்றினார்.

மேலும் கௌரவ விருந்தினராக கலந்துகொண்ட தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி @anbil_mahesh அவர்கள், விளையாட்டில் சாதனை புரியும் ஓவ்வொரு வீரர்களுக்கும், தமிழக அரசு உறுதுணையாக இருந்து, ஊக்கமளித்து வழிகாட்டுகிறது என்பதை எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வில் அனிதா டெக்ஸ்காட்டின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு. கே.சந்திரசேகர் அவர்கள், திருச்சி - பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் மற்றும் செனட் உறுப்பினர் டாக்டர் ஆர். சக்தி கிருஷ்ணன் அவர்கள், பெஃபி தமிழ்நாடு மாநில பிரிவு செயலாளர் டாக்டர் D. பிரசன்ன பாலாஜி அவர்கள்,

மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் திரு. A.G.மௌரியா IPS (ஓய்வு) அவர்கள், தலைமை நிலையச் செயலாளர் திரு. செந்தில் ஆறுமுகம், மாநிலச் செயலாளர்கள் திரு. வைத்தீஸ்வரன், திருமதி. சினேகா மோகன்தாஸ், திருமதி. பத்மா ரவிச்சந்திரன், மண்டல அமைப்பாளர்கள் திரு. செந்தில் குமார், திரு. பிரகதீஸ், திரு. உமா சங்கர் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோருடன் மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, வட்ட கிளை நிர்வாகிகள் ஆகியோருடன்,

பல்வேறு கல்லூரிகளின் தாளாளர்கள், உதவி பேராசிரியர்கள், விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், அரசுப் பள்ளிகளின் விளையாட்டு ஆசிரியர்கள், வீரர்களுக்கு மருத்துவ வசதிகளை செய்து தரும் தனியார் மருத்துவமனை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam

Social Media Link

X: https://x.com/i/status/2003500915387760874

Facebook: https://www.facebook.com/share/p/1CDzNp9aKc/

https://www.instagram.com/p/DSnM20bCX5k/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

சமீபத்திய காணொளி







Share this post