வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் பொதுமக்களுக்கு உதவிய மநீம கட்சியினர்.

18 நவம்பர், 2024

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் பொதுமக்களுக்கு உதவிய மநீம கட்சியினர்

நாகை நகராட்சி 27, 28, 29, 30, 31-வது வார்டு மற்றும் ஏனங்குடி ஊராட்சியில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெற்றது. மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல் ஹாசன் அவர்களின் அறிவுறுத்தல்படி, இந்த முகாமில் கட்சி நிர்வாகிகள் பங்கேற்று, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் உள்ளிட்ட பணிகளில் பொதுமக்களுக்கு உறுதுணையாக இருந்தனர்.

கட்சியின் நாகப்பட்டினம் மாவட்டச் செயலாளர் திரு. எம்.எம்.செய்யது அனஸ் அவர்கள், திருமருகல் ஒன்றியச் செயலாளர் திரு. ஜி.பிரான்சிஸ் அவர்கள், நற்பணி இயக்க மாவட்ட அமைப்பாளர் திரு. ஓம்பிரகாஷ் அவர்கள், ஒன்றிய துணைச் செயலாளர் திரு. ரஹ்மத்துல்லாஹ், ஊடகப் பிரிவு மாவட்ட அமைப்பாளர் திரு. முருகேசன் அவர்கள் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் இந்த முகாமில் பங்கேற்று, மக்களுக்கு உதவினர்.

#KamalHaasam 
#MakkalNeedhiMaiam

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1858541825570807814

Facebook: https://www.facebook.com/share/p/1DeoRR16Mo/

Instagram: https://www.instagram.com/p/DChMvfNSbg3/?utm_source=ig_web_copy_link

சமீபத்திய காணொளி







Share this post