எழும்பூரில் மாபெரும் மருத்துவ முகாம்.
மக்கள் நீதி மய்யம் தலைவர், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு. கமல் ஹாசன் அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக,
எழும்பூர் மநீம மாவட்டம், 108வது வார்டுக்கு உட்பட்ட அம்பேத்கர் விளையாட்டுத் திடலில்,
சென்னை மண்டலச் செயலாளர் திரு. மயில் வாகனன் அவர்களின் தலைமையில்,
எழும்பூர் மாவட்டச் செயலாளர் திரு. சீனிவாசன் அவர்களின் முன்னிலையில்,
காவேரி மருத்துவமனையுடன் இணைந்து நடத்தப்பட்ட மாபெரும் இலவச மருத்துவ முகாமில்,
100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனைகளைப் பெற்று பயனடைந்தனர்.
கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் திரு. சண்முகராஜன், இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் திரு. சிலம்பரசன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளர் திருமதி. வெங்கடேஷ்வரி, எழும்பூர் நகரச் செயலாளர் திரு. கமல், வட்டச் செயலாளர்கள் திரு. சிங்காரவேலன், திரு. லாரன்ஸ், அணிகளின் நகர அமைப்பாளர்கள் திரு.தினேஷ், திருமதி. அனிதா, திருமதி. சுபா மற்றும் நிர்வாகி திரு. ராஜ்குமார் ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இம்முகாமில் வட்டச் செயலாளர்கள் திரு. சுதாகர் திரு. ஆளவந்தான் ரவி, நிர்வாகி திரு. ராம் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, வட்ட, கிளை நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
Social Media Link
X: https://x.com/i/status/2000195021765845220
Facebook: https://www.facebook.com/share/p/1FrLLdnANk/
Instagram: https://www.instagram.com/p/DSPtHRuiXZO/?igsh=MWM3Z3YxaDRnZDVvNw==