காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு நூலின் பிரதியை பெற்றுக்கொண்ட மநீம பொதுச் செயலாளர்.

8 நவம்பர், 2025

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மாண்புமிகு மு.க.ஸ்டாலின் @mkstalin அவர்கள்‌ "காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு" என்ற நூலை இன்று வெளியிட்டார்.

திமுக இளைஞரணி சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற இவ்விழாவில், திமுக பொதுச் செயலாளர், அமைச்சர் மாண்புமிகு துரைமுருகன் @DuraimuruganDmkஅவர்கள், இளைஞரணிச் செயலாளரும், துணை முதல்வருமான மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் @Udhaystalin அவர்கள் மற்றும் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.‌

தலைவர் திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்களின் அறிவுறுத்தலின்படி, விழாவில் பங்கேற்ற மக்கள் நீதி மய்யம் பொதுச் செயலாளர் திரு. ஆ. அருணாச்சலம் @Arunachalam_Adv அவர்கள் நூலின் பிரதியை மாண்புமிகு முதல்வர் அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
 
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam

Social Media Link

X: https://x.com/maiamofficial/status/1987136005455921402?s=20

Facebook: https://www.facebook.com/share/p/16ppEJLeyC/

Instagram: https://www.instagram.com/p/DQy6n2aCRAh/?utm_source=ig_web_copy_link&igsh=Ym04ampsajUyZGNk


சமீபத்திய காணொளி







Share this post