மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்கள், முத்தமிழறிஞர் டாக்டர். கலைஞர் அவர்களின் 7-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, டெல்லியிலுள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் அலுவலகமான அண்ணா – கலைஞர் அறிவாலயத்திற்கு சென்று, கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து, புகழஞ்சலி செலுத்தினார்.
நிகழ்வில் திராவிட முன்னேற்றக் கழக மாநிலங்களவை உறுப்பினர்களின் குழுத்தலைவர் திரு. திருச்சி சிவா அவர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள் டாக்டர். கனிமொழி NVN சோமு அவர்கள், திரு. S.கல்யாண சுந்தரம் அவர்கள், மக்களவை உறுப்பினர் டாக்டர். P.கணபதி ராஜ்குமார் அவர்கள், மாநிலங்களவை உறுப்பினர் திருமதி. ராஜாத்தி @ கவிஞர் சல்மா அவர்கள் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் அவர்கள் உடனிருந்தார்கள்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
Social Media Link
Twitter: https://x.com/maiamofficial/status/1953777713380307096
Facebook: https://www.facebook.com/share/p/15EfCkPBhK/
Instagram: https://www.instagram.com/p/DNF5BEaJL7O/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==