நம்மவர் தொழிற்சங்கப் பேரவை மற்றும் சிவகாசி கமல் ஹாசன் நற்பணி இயக்கம் சார்பில் வழங்கப்பட்ட ஆம்புலன்ஸ் சேவையை துவங்கி வைத்தார் மநீம தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள்.

18 ஜூலை, 2025

 

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்கவிருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள், இன்று (18-07-2025) ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்திற்கு வருகை புரிந்தார்.

இந்த வருகையின்போது, நம்மவர் தொழிற்சங்கப் பேரவை மற்றும் சிவகாசி கமல் ஹாசன் நற்பணி இயக்கம் சார்பில், மருத்துவ அவசர காலங்களில் பயன்படும் வகையில் ஒரு ஆம்புலன்ஸ் வாகனத்தை பொது மக்களின் இலவசப் பயன்பாட்டிற்கு வழங்கினர். இந்த ஆம்புலன்ஸ் சேவையை நம் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் திரு. A.G.மௌரியா, பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம், நம்மவர் தொழிற்சங்கப் பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் டாக்டர். R.சொக்கர், விருதுநகர் மாவட்ட கமல் ஹாசன் நற்பணி அணி அமைப்பாளர் திரு. A.S.நாகராஜன், சிவகாசி மாவட்டச் செயலாளர் திரு. முகுந்தன், நம்மவர் தொழிற்சங்கப் பேரவை பொதுச் செயலாளர் திரு. ரவிச்சந்திரன், பொருளாளர் திருமதி. பானுமதி, மாநில துணை ஒருங்கிணைப்பாளர்கள் திரு. மாடசாமி, திரு. P.S. சரவணன், மாநில துணைச் செயலாளர்கள் திருமதி. சாந்தி, திரு. யுவராஜ், மாநில செயற்குழு உறுப்பினர்கள் திரு. லெனின், திரு. S.ரமேஷ், திரு. R.ஜெகன், திரு. T.பிரசாத், களப் போராளிகள் திரு. பாலசுப்பிரமணி, திருமதி. லீலா, தொழிலாளர் அணி நிர்வாகி திரு. சேகர், 
சிவகாசி திரு. ஹரிஹரபாண்டி, விருதுநகர் மாவட்ட நற்பணி அணி நிர்வாகிகள் திரு.S.பவுன்ராஜ், திரு.மாரியப்பன், திரு.பிச்சைக்கனி, திரு.மூர்த்தி, திரு.A.சக்திலிங்கம் மற்றும்,

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநிலச் செயலாளர்கள் திரு. செந்தில் ஆறுமுகம், திரு. முரளி அப்பாஸ், டாக்டர். மயில்சாமி, திரு. ராகேஷ் ராஜசேகரன், திரு. ல‌ஷ்மன், திரு. அரவிந்த்ராஜ், திரு. மூர்த்தி, சென்னை மண்டலச் செயலாளர் திரு. மயில்வாகனன், சமூக ஊடக அணி மண்டல அமைப்பளர்கள் திரு. ராஜா, திரு. செந்தில், திரு. தாஜுதீன், திருமதி. பிரிசில்டா நான்சி மற்றும் மண்டல, மாவட்ட, நகர, வட்ட, கிளை நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

#KamalHaasan 
#MakkalNeedhiMaiam
#NTSP 
#நம்மவர்_தொழிற்சங்கப்பேரவை

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1946181001073541428

Facebook: https://www.facebook.com/share/p/1Fa7WvGL34/

Instagram: https://www.instagram.com/p/DMP7JhdpYFk/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

சமீபத்திய காணொளி







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.
Share this post