புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்களுக்கான ‘‘பயிற்சிப்பட்டறை”.

20 ஜூலை, 2023


கட்சிக் கட்டமைப்பை விரிவுபடுத்தும் வகையில் மக்கள் நீதி மய்யத்தின் மாவட்டங்கள் 234ஆகப் பிரிக்கப்பட்டு அதனடிப்படையில் புதிய மாவட்டங்களுக்கான மாவட்டச் செயலாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 23.06.2023 அன்று தலைவர் நம்மவர் அவர்களால் நியமிக்கப்பட்ட 11 புதிய மாவட்ட செயலாளர்களுக்கான ‘‘பயிற்சிப்பட்டறை” தலைமை நிலையத்தில் நேற்று நடைபெற்றது.

பொதுச்செயலாளர் திரு.ஆ.அருணாச்சலம்.M.A.B.L, மாநிலச் செயலாளர் திரு. சிவ.இளங்கோ, தலைமை நிலையச் செயலாளர் திரு. செந்தில் ஆறுமுகம் ஆகியோர் உறுப்பினர் சேர்க்கை, நிர்வாகிகள் நியமனம், கொடியேற்றம், மக்கள் பிரச்னைகளைத் தீர்க்க முன்னெடுக்கவேண்டிய களப்பணிகள், தலைமைப் பண்புகள், தமிழக அரசியல் வரலாறு, மய்யத்தின் கொள்கைகள், சமூகப் பிரச்னைகளில் தலைவரின் பார்வை 2024 பாராளுமன்ற தேர்தலுக்குச் செய்யவேண்டிய அவசிய-அவசரப்பணிகள், அதை செயல்படுத்தும் முறை குறித்துப் பயிற்சியளித்தனர். காலை முதல் இரவு வரை நடைபெற்ற நிகழ்வில் புதிய மாவட்டச் செயலாளர்கள் மிகுந்த உற்சாகத்தோடு பங்கேற்றனர்.                     

  

Social Media Link

Twitter: https://twitter.com/maiamofficial/status/1681992053272768512?s=20

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02su2ZMgA36AdH92FQvtcpzPD8bnCPJx4AZyVkiThjnd1BWsomLzstw9mi27UgwD3Nl&id=100064900236042&mibextid=Nif5oz

Instagram: https://www.instagram.com/p/Cu6vXrnv6tc/?igshid=MzRlODBiNWFlZA==

சமீபத்திய காணொளி







Share this post