மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி,
2026 சட்டமன்றத் தேர்தல் முன்னேற்பாடாக, கட்சியின் சமூக ஊடக அணி நிர்வாகிகள் செயல்பாட்டு நெறிமுறை கூட்டம், மதுரை – கே.கே நகர், ராயல் ரெசிடண்சியில்
அணியின் மதுரை மண்டல அமைப்பாளர் திரு. P.ராஜா அவர்களின் தலைமையில்,
மாநிலச் செயலாளர் திரு. லக்ஷ்மன் அவர்களின் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.
இராமநாதபுரம் மாவட்ட அமைப்பாளர் திரு. V.ஜெய்கணேஷ் அவர்களின் வரவேற்புரையில் துவங்கிய இக்கூட்டத்தில், கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் திரு. செந்தில் ஆறுமுகம், சமூக ஊடக அணியின் மண்டல அமைப்பாளர்கள் திரு. P.ராஜா, திரு. மூர்த்தி சிவா, திரு. செந்தில் குமார், திரு. தாஜுதீன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இந்த செயல்பாட்டு நெறிமுறை கூட்டத்தில், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் சமூக ஊடக அணியின் பங்களிப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்தும், பூத் கமிட்டி நிர்வாகிகளின் பணிகள் குறித்தும், தொகுதியின் செயல்திட்டங்கள் மற்றும் பிரச்சார முறைகளை குறித்தும் மாவட்ட அமைப்பாளர்கள் திரு. பிரசாத், திரு. கார்த்திக் ராஜ் ஆகியோர் பயிற்சியளித்தனர்.
இதில் தொழில்முனைவோர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. பன்னீர் செல்வம், மகளிர் அணி மாநிலச் செயலாளர் (மதுரை & நெல்லை மண்டலங்கள்) திருமதி. பத்மா ரவிச்சந்திரன், நம்மவர் தொழிற்சங்கப் பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. R.சொக்கர், மதுரை மண்டல அமைப்பாளர்கள் திரு. நாகநாதன், திரு. கிருஷ்ணகுமார், திரு. பரணிராஜன், திரு. முத்துக்கருப்பன், திருமதி. கலையரசி, மாவட்டச் செயலாளர்கள் திரு. V.B.மணி, திரு. நம்மவர் A.செந்தில், திரு. கதிரேசன் மற்றும் திருமதி. சுகுணா ஆகியோருடன் மண்டல, மாவட்ட, நகர, வட்ட, கிளை செயலாளர்கள், அமைப்பாளர்கள் முதலானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
@ikamalhaasan
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
Social Media Link
X: https://x.com/maiamofficial/status/1990815838992310358?s=20
Facebook: https://www.facebook.com/share/p/14UBDQWy492/
Instagram: https://www.instagram.com/p/DRNC3biCVnV/?utm_source=ig_web_copy_link&igsh=MWx2b2kxdjJnam5xZA==