மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமை நிலையத்தில், 79-ஆம் ஆண்டு சுதந்திரதின விழா கொண்டாட்டம்.
நமது தேசத்தின் 79-ஆம் ஆண்டு சுதந்திரதின கொண்டாட்டம், கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இன்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைமை அலுவலகத்தில் மிகச்சிறப்புடன் கொண்டாடப்பட்டது. கட்சியின் துணைத்தலைவர் திரு. A.G.மௌரியா IPS(Rtd) அவர்கள் தேசியக்கொடியை ஏற்றி சுதந்திரதின பேருரையாற்றினார். அத்துடன் அனைவருக்கும் இனிப்பு வழங்கி, குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது.
விழாவில், நற்பணி அணி மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. G.நாகராஜன், மாநிலச் செயலாளர்கள் திரு. செந்தில் ஆறுமுகம், திரு. முரளி அப்பாஸ், திரு. S.B.அர்ஜுனர், திரு. ராகேஷ் ராஜசேகரன்,
மாவட்டச் செயலாளர்கள் திரு. உதயகுமார், திரு. சைதை ஜெ.கதிர், திரு. ஸ்ரீனிவாசன், திரு. முசாபர், திரு. கோவிந்தராஜ், திரு. பாலமுருகன், திரு. சக்தி, திரு. மாறன், திரு. கோமகன், திரு. தேசிங்குராஜன், அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், மாநகர, வட்ட, கிளை நிர்வாகிகள், நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் மாநில பொருளாளர் திருமதி. M.பானுமதி, மாநிலத் துணை ஒருங்கிணைப்பாளர் திரு. K.மாடசாமி, மாநிலத் துணைச் செயலாளர் திரு. யுவராஜ், பேரவை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#IndependenceDay
Social Media Link
Twitter: https://x.com/maiamofficial/status/1956281111300202853
Facebook: https://www.facebook.com/share/p/1Qu7fc91w6/
Instagram: https://www.instagram.com/p/DNXrZNPp5Zf/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==