மக்கள் நீதி மய்யம் தலைவர், மாநிலங்களவை உறுப்பினர் மாண்புமிகு திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்கள் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக,
கட்சியின் ஆதிதிராவிடர் நல அணி சார்பில் கோவை - கணபதி காமராஜபுரத்தில் நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்வு,
ஆதிதிராவிடர் நல அணி மாநிலச் செயலாளர் திரு. சிட்கோ A. சிவா அவர்கள் தலைமையில்,
அணியின் மாவட்ட அமைப்பாளர் திரு. தம்புராஜ் அவர்களின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்றது.
துணைத் தலைவர்கள் திரு. A.G. மௌரியா IPS (Retd.), திரு. R. தங்கவேலு ஆகியோர், 500-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேஷ்டி, சேலைகள் மற்றும் 100 பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு, புத்தகங்கள் மற்றும் 3 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக தலா 7500 வழங்கினர்.
நிகழ்வில் கட்சியின் நற்பணி அணி மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. G. நாகராஜன்,
தலைமை நிலையச் செயலாளர் திரு. செந்தில் ஆறுமுகம், இளைஞர் அணி மாநிலச் செயலாளர் திரு. சினேகன், மகளிர் அணி மாநிலச் செயலாளர் (கோவை, திருச்சி, சேலம் மண்டலங்கள்) திருமதி. மூகாம்பிகா ரத்தினம்,
நற்பணி அணி மாநில துணை ஒருங்கிணைப்பாளர் திரு. செல்லபாண்டி,
கோவை மண்டலச் செயலாளர் திரு. ரங்கநாதன்,
மண்டல அமைப்பாளர்கள் திரு. ரூபலிங்கம், திரு. சித்திக், திரு. தாஜூதீன், திரு. செவ்வேல், திரு. ஸ்ரீதர்,
மாவட்டச் செயலாளர்கள் திரு. பிரபு, திரு. மயில் கணேஷ், திரு. மோகன்ராஜ், திரு. மனோகரன், திரு. ஜாஹிர் உசேன், திரு. முஜிபூர் ரஹ்மான் நிர்வாகிகள் திரு. சிவராஜ், திரு. நாகராஜ், திரு. சிக்கந்தர் ஆகியோர் உட்பட மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, வட்ட, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
Social Media Link
X: https://x.com/maiamofficial/status/1995511186457346107?s=20
Facebook: https://www.facebook.com/share/p/1AABHaHXj5/
Instagram: https://www.instagram.com/p/DRua06ziayA/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==