திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் சார்பில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம்.

16 April 2026

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் சார்பில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம்.

15.04.2026 அன்று சேலத்தில் நடைபெற்ற மகளிர் உரிமைப் பேரணி மற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல்ஹாசன் அவர்கள்,

"இன்று நடக்கும் கொடுமையான சில அரசியல் நிகழ்வுகளையும் அண்ணா அவர்கள் அன்றே எதிர்பார்த்தது தான் என்று பேசினார்". மேலும், "தெற்கு தேய்கிறது என அவர் (அண்ணா) போகிற போக்கில் சொல்லிவிடவில்லை.

"தெற்கை வஞ்சிக்கிறார்கள் என நான் என்றோ எழுப்பிய குரல் இன்னமும் அப்படியே இருக்கிறது" என்றும் அண்ணா சொன்னார்.

அண்ணா அவர்கள் அன்று கூறியது போல, "இன்றும் போலியான ஓர் அரசியலை மத்தியில் ஆளுபவர்கள் செய்து வருகிறார்கள்."

"நான் இந்த நிகழ்விற்கு வந்துள்ளது திமுகவின் வேட்பாளர்களுக்குப் பிரச்சாரம் செய்வதற்காக மட்டுமல்ல, நாளை நாடாளுமன்றத்தில் நடக்கவிருக்கும் தொகுதி மறுவரையறை அவலத்திற்கு குரல் எழுப்பவும் வந்துள்ளேன்" என்றும், 

தென் மாநிலங்களை வஞ்சிக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்தும் பேசினார்.

இந்நிகழ்வில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்களும், 

மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சி வேட்பாளர்களும், நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் இந்தப் பெரும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.

#KamalHaasan #KamalHaasan_MP #MakkalNeedhiMaiam #TNElection2026 #Delimitation

Social Media Link

X: https://x.com/i/status/2044672142139412666

Facebook: https://www.facebook.com/share/p/1YYWzqYLNn/

Instagram: https://www.instagram.com/p/DXLvHW4mhMW/?img_index=3&igsh=cDc0MGdqYXM2OHlo

Recent video







Share this post