கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் நிதியுதவியும் அளித்தார். பாதிக்கப்பட்டவர்களுடனான தலைவர் சந்திப்பின்போது முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான திரு. வி. செந்தில் பாலாஜி அவர்கள் உடனிருந்தார்.
தவெகவினர் கூட்டம் நடத்த அனுமதி கேட்ட இடங்களையும், கூட்ட நெரிசலில் சிக்கி பொதுமக்கள் உயிரிழந்த இடத்தையும் தலைவர் திரு.
கமல் ஹாசன் ஆய்வு செய்தார்.
தலைவர் அவர்களின் கரூர் பயணத்தின்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர்கள் திரு. A.G.மௌரியா IPS (Retd) அவர்கள், திரு. தங்கவேலு அவர்கள், பொதுச் செயலாளர் திரு. ஆ. அருணாச்சலம் அவர்கள் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
@ikamalhaasan @v.senthilbalaji
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#KarurTragedy
#KarurStampede
Social Media Link
Twitter: https://x.com/maiamofficial/status/1975266273845207066
Facebook: https://www.facebook.com/share/p/1ApLoSNxCo/
Instagram: https://www.instagram.com/p/DPelM6_AYDJ/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==