2026 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் தொடர்பான காஞ்சி மண்டல நிர்வாகிகள் கலந்தாலோசனைக் கூட்டம்,
மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. @ikamalhaasan அவர்களின் தலைமையில், இன்று (18.09.2025) சென்னை முத்தமிழ்ப் பேரவை அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.
இதில் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள், கட்சியின் நிர்வாகிகளிடையே உரையாற்றினார்.
முன்னதாக காஞ்சி மண்டலச் செயலாளர் திரு. SKPB.கோபிநாத், காஞ்சி மண்டலத்தின் மாவட்டச் செயலாளர்கள் திரு. அருள், திரு. ஸ்டாலின் செல்வராஜ், திரு. கிருஷ்ணமூர்த்தி, திரு. கண்ணன், திரு. தினேஷ், திரு. விஜயகுமார், மாவட்டப் பொருப்பாளர் திரு. உதயசந்திரன் ஆகியோர் தங்களின் தொகுதி களநிலவரங்கள் குறித்து, தலைவர் அவர்களிடம் தெரிவித்தனர்.
இந்தக் கலந்தாலோசனைக் கூட்டத்தில் கட்சியின் துணைத் தலைவர்கள் திரு. A.G.மௌரியா IPS (Rted) அவர்கள், திரு. தங்கவேலு அவர்கள், கட்சியின் பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் அவர்கள், மாநிலச் செயலாளர்கள் திரு. செந்தில் ஆறுமுகம், திரு. முரளி அப்பாஸ், திரு. சினேகன், திரு. G.நாகராஜன், திரு. S.B.அர்ஜுனர், திரு. ராகேஷ் ராஜசேகரன், திரு. தட்சிணாமூர்த்தி, திருமதி. சினேகா மோகன்தாஸ், திரு. R.லக்ஷ்மன், திருமதி. பத்மா ரவிசந்திரன், திரு. பன்னீர் செல்வம், திரு. சிட்கோ A.சிவா, திரு. E.T. அரவிந்ராஜ், மண்டல அமைப்பாளர் திரு. D.K.யேசு மற்றும் மாவட்ட, நகர, வட்ட, கிளை செயலாளர்கள், அமைப்பாளர்கள் முதலானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#Elections2026
Social Media Link
Twitter: https://x.com/maiamofficial/status/1968734798861713423
Facebook: https://www.facebook.com/share/p/1A4MMM4iZN/
Instagram: https://www.instagram.com/p/DOwFTCoCfyv/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==