மக்கள் நீதி மய்யம் கோவை சிங்காநல்லூர் அலுவலகத்தில் மே தினக் கொடியேற்று விழா
மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களது வழிகாட்டுதல்படி, மே தினத்தை முன்னிட்டு கோவை சிங்காநல்லூரில் உள்ள தலைமை அலுவலகத்தில், கட்சியின் மாவட்டச் செயலாளர் திரு. மயில் K.கணேஷ் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், நம்மவர் தொழிற்சங்கப் பேரவைக் கொடியை தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர் திரு. ரகுபதி அவர்கள் ஏற்றிவைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
தொடர்ந்து, கட்சி பொறுப்பாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டதுடன், புதிய பொறுப்புகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தொழிலாளர் அணி மாநகர அமைப்பாளர் திரு.ராதாகிருஷ்ணன் சிறப்பாக செய்திருந்தார். மாவட்ட துணைச் செயலாளர் திரு. சௌந்தரராஜன் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்வில் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர்கள் திரு. செந்தில்குமார், திரு. தனபால், மாவட்ட அமைப்பாளர்கள் திரு. சிவக்குமார், திரு. ஜெயசுதன், திரு. கமல், திருமதி. தனலட்சுமி, சமூக ஊடக அணி மாநகர அமைப்பாளர் செல்வி. நித்யஸ்ரீ, இளைஞரணி அமைப்பாளர் திரு. தாமோதரன், மகளிரணி அமைப்பாளர் திருமதி. சுலோச்சனா, மாநகரச் செயலாளர்கள் திரு. ரவீந்திரன், திரு. முருகன், மாநகரப் பொருளாளர் திரு. முருகராஜ், வார்டு செயலாளர்கள் திரு. பேச்சிமுத்து, திரு. விஜயன், திரு. மோகன்ராஜ், தொழில்முனைவோர் அணி நிர்வாகி திரு. பாபு மற்றும் திரு. ஸ்டாலின், திரு. மதிவாணன், திரு. கந்தசாமி, திரு. கமல் உதயன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
Social Media Link
Twitter: https://x.com/maiamofficial/status/1918262891335303626
Facebook: https://www.facebook.com/share/p/1EBDsXsTQt/
Instagram: https://www.instagram.com/p/DJJixpaIge-/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==