நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்கவிருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள், நேற்று (18-07-2025) ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்திற்கு வருகை புரிந்தார்.
இந்த வருகையின் போது, சமூக ஊடக அணி நிர்வாகிகள் அனைவரின் வாழ்த்துகளையும் பெற்றுகொண்ட தலைவர் அவர்கள், அரசியலில் சமூக ஊடகத்தின் பங்களிப்பு, அதனால் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் அணியின் நிர்வாகிகள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் கலந்தாலோசித்தார். மேலும் சமூக ஊடக அணி நிர்வாகிகளின் அடையாள அட்டையை அணியின் மாநிலச் செயலாளர் திரு. லக்ஷ்மன், மண்டல அமைப்பளர்கள் திரு. ராஜா, திரு. செந்தில், திரு. தாஜுதீன், திருமதி. பிரிசில்டா நான்சி ஆகியோரிடம் வழங்கினார்.
இந்நிகழ்வில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் திரு. A.G.மௌரியா, பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம், மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநிலச் செயலாளர்கள் திரு. செந்தில் ஆறுமுகம் திரு. முரளி அப்பாஸ், திரு. ராகேஷ் ராஜசேகரன், திரு. அரவிந்த்ராஜ், திரு. மூர்த்தி, சென்னை மண்டலச் செயலாளர் திரு. மயில்வாகனன் மற்றும் சமூக ஊடக அணியின் நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர்.
இறுதியில் பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் அவர்கள் நிர்வாகிகளிடையே உரையாற்றி அனைவரையும் ஊக்குவித்தார். மேலும் மாநிலச் செயலாளர் திரு. செந்தில் ஆறுமுகம் அவர்கள் மக்களின் குறைகளைத் தீர்க்க தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, சமூக ஊடக அணி நிர்வாகிகள் மேற்கொள்ளவேண்டிய சட்ட விதிகள் பற்றி எடுத்துரைத்தார்.
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
Social Media Link
Twitter: https://x.com/maiamofficial/status/1946570725067796801?t=1aF9EsFw6nFVWbozogJFyg&s=19
Facebook: https://www.facebook.com/share/p/12M5UapsfxT/
Instagram: https://www.instagram.com/p/DMSry_jvpcZ/?igsh=b200azAxZ240Yncy