மக்கள் நீதி மய்யம் சார்பில் கோரிக்கை மனு!
சைதாப்பேட்டை ம.நீ.ம மாவட்டம் சார்பில், தொகுதி மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை, சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு. அருள் பிரகாசம் அவர்களிடம், சென்னை மண்டல செயலாளர் திரு. T.மயில்வாகனன் மற்றும் சைதாப்பேட்டை மநீம மாவட்டச் செயலாளர் திரு. ஜெ. கதிர் வழங்கினர்.
இந்தக் கோரிக்கை மனுவில், திறக்கப்படாமல் உள்ள அம்மா பூங்காவை உடனடியாகப் பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வருதல், அம்பேத்கர் கால்பந்து மைதானம் (140 வது வட்டம்) மற்றும் இதர கால்பந்து மைதானங்களை மேம்படுத்தி விளையாட்டு வீரர்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வருதல், ஒலிம்பியா பார்க்கிலுள்ள (168 வது வட்டம்) மாநகராட்சிப் பூங்காவை சீரமைத்தல், கலைமகள் நகரில் உடற்பயிற்சிக் கூடம் அமைத்தல், அம்மா பூங்கா பின்புறமுள்ள ஃபுட்பால் மைதானம் சீர் செய்தல் மற்றும் 139 வது வட்டம் R6 விளையாட்டுத் திடலில் உடற்பயிற்சி செய்யும் தளவாடங்கள், அங்குள்ள மோசமான இருக்கைகள் ஆகியவற்றை விரைந்து சரி செய்தல் உள்ளிட்ட சாராம்சங்கள் அடங்கியுள்ளன.
சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு. அருள்பிரகாசம் அவர்கள் மனுவில் குறிப்பிட்டுள்ள கோரிக்கைகளைப் பரிசீலித்து, நடவடிக்கை எடுக்க ஆவன செய்வதாக உறுதியளித்தார்.
மேலும் இந்நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர் திருமதி.பாக்கியம், திரு. போலீஸ் மோகன், திரு. முத்துக்குமார், மாவட்ட அமைப்பாளர் திரு.சந்தர், மாவட்ட துணை அமைப்பாளர் திரு. சுல்தான் பாய், பகுதி செயலாளர் திரு. செல்வகுமார், வட்டச் செயலாளர்கள் திரு. ராஜேஷ், திரு. முனுசாமி, திரு. ஆறுமுகம், திரு. சத்திய நாராயணன், திரு. பரந்தாமன், திரு. தனசேகரன், திருமதி. புவனா சுரேஷ், திரு. ஹரிஷ், திரு. கார்த்திக், திருமதி. ஜெனிபர் உள்ளிட்ட மய்ய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
Social Media Link
X: https://x.com/maiamofficial/status/2070406100768411860?s=20
Facebook: https://www.facebook.com/share/p/197838daMU/
Instagram: https://www.instagram.com/p/DaClxoTmk6-/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==