தமிழகமெங்கும் தொழிலாளர்களுக்கு மே தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்த மக்கள் நீதி மய்யம் மாணவர் அணி நிர்வாகிகள்.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களது வழிகாட்டுதலின்படி, மாணவர் அணி மாநிலச் செயலாளர் திரு. ராகேஷ் ராஜசேகரன் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழகமெங்கும் தொழிலாளர்களுக்கு மக்கள் நீதி மய்யம் மாணவர் அணி நிர்வாகிகள்.நேரில் நல்வாழ்த்துகளைத் தெரிவித்து, இனிப்பு வழங்கிப் பெருமிதப்படுத்தினர்.
தொழிலாளர்களின் அரும்பணியையும், சேவையையும் போற்றும் வகையில், சென்னை மண்டலத்தில் மதுரவாயல், காஞ்சிபுரம் மண்டலத்தில் காஞ்சி வணிகர் வீதி, திருச்சி மண்டலத்தில் மயிலாடுதுறை திருஇந்தளூர், விழுப்புரம் மண்டலத்தில் கீழ்பெரும்பாக்கம், சேலம் மண்டலத்தில் கிருஷ்ணகிரி பத்தலப்பள்ளி சந்தை, நெல்லை மண்டலத்தில் மேலப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் சுமை தூக்கும் தொழிலாளர்கள், சந்தைப் பணியாளர்கள், தையல் கலைஞர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு,
மக்கள் நீதி மய்யம் மாணவர் அணி சென்னை மண்டல அமைப்பாளர்.திரு. சந்துரு, திருச்சி மண்டல அமைப்பாளர் திரு. உமாசங்கர், விழுப்புரம் மண்டல அமைப்பாளர் திரு. தேவேந்திரன், ஓசூர் மாவட்ட அமைப்பாளர் திரு. தெளசிப், பாளையங்கோட்டை மாவட்ட அமைப்பாளர் திரு. அஸ்வின், காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பாளர் (பரிந்துரை) திரு. தனுஷ் ஆகியோரின் ஒருங்கிணைப்பில்,மே தின வாழ்த்து தெரிவிக்கப்பட்டு, இனிப்புகள் வழங்கப்பட்டது.
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
Social Media Link
Twitter: https://x.com/maiamofficial/status/1918309649671176277
Facebook: https://www.facebook.com/share/p/15xufLRYqe/
Instagram: https://www.instagram.com/p/DJJ4FOFJk7_/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==