மகளிர் அணி சார்பில், நம்மவர் படிப்பகத்திற்கு UPS வழங்கும் நிகழ்வு.

17 November 2025

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக,

மதுரை - மலைச்சாமிபுரம், அருப்புக்கோட்டை – கல்லூரணி, பரமக்குடி – வேந்தோணி ஆகிய இடங்களில் அமைந்துள்ள நம்மவர் படிப்பகத்தில், கேக் வெட்டி கொண்டாடியதுடன், படிப்பகத்திற்கு தடையில்லா மின்சாரம் கிடைக்க ஏதுவாக UPS வழங்கும் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது.

கட்சியின் மகளிர் அணியின் மாநிலச் செயலாளர் திருமதி. பத்மா ரவிச்சந்திரன் (மதுரை & நெல்லை மண்டலங்கள்), மதுரை மண்டல அமைப்பாளர் திருமதி. கலையரசி, வட அமெரிக்க கமல் ஹாசன் நற்பணி இயக்க நிர்வாகிகள் திருமதி. பத்மாவதி (மயிலாப்பூர்), திருமதி. சுகன்யா ஹாரிஸ், மாவட்ட அமைப்பாளர்கள் திருமதி. உமாராணி, திருமதி. லீலாவதி, திருமதி. உமையாள், திருமதி. பாண்டி செல்வி, திருமதி. மணிமேகலை, மாவட்டத் துணை அமைப்பாளர் திருமதி. ஜெயலட்சுமி, மய்ய நிர்வாகிகள் திருமதி. சுகுணா, திருமதி. உமாராணி, திருமதி. ராஜலெட்சுமி ஆகியோரின் ஏற்பாட்டில்,

மதுரை - மலைச்சாமிபுரம் படிப்பக ஆசிரியர்கள் திருமதி. சரவணவள்ளி, திருமதி. முத்துராக்கு, செல்வன். செங்கதிர் ஆகியோரிடமும், 

அருப்புக்கோட்டை – கல்லூரணி படிப்பக ஆசிரியர்கள் திருமதி. சுப்புலெட்சுமி, திருமதி. பாண்டி மீனாள், திரு. கலைவேந்தன் ஆகியோரிடமும், 

பரமக்குடி – வேந்தோணி படிப்பக ஆசிரியர்கள் திருமதி. ராசாத்தி, திருமதி. நாகமஞ்சு ஆகியோரிடமும் UPS வழங்கப்பட்டது. 

கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் திரு. செந்தில் ஆறுமுகம் அவர்கள், பரமக்குடி – வேந்தோணி நம்மவர் படிப்பகத்தில் திறன் பயிலும் மாணவர்களுடன் காணொளி மூலமாக உரையாடினார்.

மதுரை – மலைச்சாமிபுரம் படிப்பகத்திற்கு, நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் சார்பில், தொழிற்சங்க பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் Dr .R.சொக்கர் புத்தகங்களை வழங்கினார்.

தொடர்ந்து வட அமெரிக்க கமல் ஹாசன் நற்பணி இயக்கத்தின் சார்பில், 3 இடங்களிலும் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது.

நிகழ்வில் மகளிர் அணியின் நெல்லை மண்டல அமைப்பாளர் திருமதி. செல்வி, மாவட்ட அமைப்பாளர் செல்வி. முகேஸ்வரி, மாவட்டச் செயலாளர்கள் திரு. கார்த்திகேயன், திரு. கதிரேசன், நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் செயற்குழு உறுப்பினர்கள் திரு. ரமேஷ், திரு. ஜெகன், திரு. பிரசாத், நிர்வாகிகள் செல்வி. ஜோதி, திருமதி. சிவகாமி, திரு. வினோத் குமார், திரு. செல்வா, பொறியாளர் திரு. விவேக், திரு. செல்வராஜ், திரு. சாரதி உள்ளிட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் உடனிருந்தனர்.

#KamalHaasan
#HBDKamalHaasan 
#CelebratingKamalHaasan
#KamalHaasan_the_centrist
#மய்யம்_கமல்ஹாசன்

Social Media Link

X: https://x.com/maiamofficial/status/1990348127308558359?s=20

Facebook: https://www.facebook.com/share/p/17koY5NcCz/

Instagram: https://www.instagram.com/p/DRJvUPVifTs/?utm_source=ig_web_copy_link&igsh=a254Z25obWFld25m

Recent video







Share this post