மலைச்சாமிபுரம் நம்மவர் படிப்பகத்தில் விருது, கல்வி உதவி வழங்கும் விழா.

26 May 2024

                `

10, 11-ம் வகுப்பில் தேர்வுபெற்ற மாணவ, மாணவிகளுக்கு மலைச்சாமிபுரம் நம்மவர் படிப்பகத்தில்
விருது, கல்வி உதவி வழங்கும் விழா வடஅமெரிக்க கமல்ஹாசன் நற்பணி இயக்கம் @KHWelfareNA வழங்கியது.

10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 25 மாணவ, மாணவிகளுக்கு, 
மலைச்சாமிபுரத்தில் அமைந்துள்ள நம்மவர் படிப்பகத்தில், வட அமெரிக்க கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்பில் விருது மற்றும் கல்வி உதவி வழங்கும் விழா நேற்று (25.5.2024) மாலை 5 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது. 

இந்த விழாவில், அறிவியல் விஞ்ஞானி திரு. லட்சுமி நாராயணன், பேராசிரியர் திருமதி பிரபா, சக்கிமங்கலம் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் திரு.தென்னவன், மக்கள் நீதி மய்யம் மதுரை மண்டலச் செயலாளர் திரு.அழகர் மற்றும் திருமதி சுமதி அழகர், கொடிக்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் திரு.திருப்பதி (மாணவ, மாணவிகளுக்கு சீருடை வழங்கியவர்), நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.சொக்கர், மாவட்டச் செயலாளர் திரு. க.கதிரேசன், கிராமப் பொறுப்பாளர் திரு. பிரபாகரன் மற்றும் மலைச்சாமிபுரம் மாணவ மாணவிகள், பெற்றோர், பொதுமக்கள் உள்ளிட்டோர் உற்சாகமாகக் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் சிறப்புரையாளர்கள் நிகழ்த்திய உரை, மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோருக்கு பெரிதும் ஊக்கம் அளிப்பதாக அமைந்தது. அதேநேரத்தில், இந்த விழா அடுத்த தலைமுறைக்கான தொடர் பயணத்துக்கு ஆக்கமளிப்பதாகவும் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

#KamalHaasan 
#MakkalNeedhiMaiam 
#நம்மவர்_படிப்பகம்

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1794763522531881026?t=U-FOUMMBU3pP5BqED8NG3w&s=19

Facebook: https://www.facebook.com/share/p/ut7SHi2EaGpCzbQG/?mibextid=qi2Omg

Instagram: https://www.instagram.com/p/C7cBPjfP6F9/?igsh=bnF2NGsybHpkcDQ4

Recent videoYour Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.
Share this post