மக்கள் நீதி மய்யம் விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் வேளச்சேரி 177வது வட்டத்தில், மாபெரும் கால்பந்து விளையாட்டுப் போட்டி.
மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, கட்சியின் விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில், வேளச்சேரி மநீம மாவட்டம், 177வது வட்டத்தில், இளம் வயது விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கவும், இளைய தலைமுறையினரிடையே விளையாட்டு ஆர்வத்தை வளர்ப்பதற்கும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், ஒருங்கிணைந்து செயல்படும் திறனை வளர்ப்பதற்கும், மாபெரும் கால்பந்து விளையாட்டுப் போட்டி மிகவும் உற்சாகமாகவும், சிறப்பாகவும் நடைபெற்றது.
கட்சியின் விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாநிலச் செயலாளர் திரு. E.T. அரவிந்த்ராஜ் அவர்களின் தலைமையில், சென்னை மண்டலச் செயலாளர் திரு. மயில்வாகனன் அவர்களின் முன்னிலையில், வேளச்சேரி மநீம மாவட்டச் செயலாளர் திரு. பாலமுருகன், மாவட்டத் துணைச் செயலாளர் திரு. சண்முக சுந்தரம் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் இப்போட்டிகள் நடைபெற்றது.
போட்டியில் 11 மற்றும் 13 வயதிற்குட்பட்ட இளம் வீரர்களுக்கான தனித்தனி அணிகள் அமைக்கப்பட்டு, முறையான விளையாட்டு விதிமுறைகளைப் பின்பற்றி, தொழில்முறை நடுவர்களின் மேற்பார்வையில், தண்ணீர், மற்றும் மருத்துவ உதவி போன்ற அடிப்படை வசதிகளுடன் நடத்தப்பட்டது.
நிகழ்வில் சமூக ஊடக அணி மாவட்ட அமைப்பாளர் திரு. பிரசாத், நகர செயலாளர்கள் திரு. சுரேஷ் மற்றும் திரு. முகிலன், மற்றும் நிர்வாகி திரு. ரவிராஜ் மற்றும் வீரர்களின் பெற்றோர்கள், பார்வையாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டு, இளம் வீரர்களை உற்சாகப்படுத்தினர்.
வட்டச்செயலாளர் திரு. சசி அவர்கள், தனது சொந்த கால்பந்து அணி வீரர்களுடன் இப்போட்டியில் கலந்துகொண்டார்.
போட்டியின் முடிவில், வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள் வழங்கப்பட்டன. மேலும், ஒவ்வொரு வீரருக்கும் ஊக்கப் பரிசுகள் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
மேலும் இந்நிகழ்வில் 25க்கும் மேற்பட்டோர் புதிய உறுப்பினர்களாக கட்சியில் தங்களை இணைத்து கொண்டனர்.
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
Social Media Link
Twitter: https://x.com/maiamofficial/status/1939693822738591782?t=NixUDxiLwTo4CBUo_x2OZg&s=19
Facebook: https://www.facebook.com/share/p/1C3w3ad1pm/
Instagram: https://www.instagram.com/p/DLh09IZvnAJ/?igsh=NnZxZjg1ZTlpZ25p