திரு.வி.க. நகர் மநீம மாவட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை & பொதுமக்களுக்கு அன்னதானம்.

9 July 2025

திரு.வி.க. நகர் மநீம மாவட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை & பொதுமக்களுக்கு அன்னதானம். 

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. @ikamalhaasan அவர்களின் வழிகாட்டுதலின்படி, சென்னை மண்டல செயலாளர் திரு. மயில்வாகனன் அவர்களின் அறிவுறுத்தல்படி, திரு.வி.க நகர் 73 வட்டத்துக்கு உட்பட்ட பகுதியில், மாவட்டச் செயலாளர் திரு. V.உதயகுமார் தலைமையில், மாவட்டத் துணைச் செயலாளர் திரு. சக்தி K.T. வெங்கடேசன் ஏற்பாட்டில் மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. 

இந்த உறுப்பினர் சேர்க்கை முகாமில் 25-க்கும் மேற்பட்ட ஆண், பெண்கள் மற்றும் திருநங்கை ரேகா ஆகியோர் மக்கள் நீதி மய்யம் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். 

இந்த நிகழ்வில் மாவட்ட பொருளாளர் திரு. ஆனந்த், சமூக ஊடக அணி மாவட்ட அமைப்பாளர்கள் திரு. ஜோசி, திரு. ராஜபுத்திரன், நகரச் செயலாளர் திரு. கமல் மதி, திருமதி. ரேவதி, திரு. தரம் குமார், வட்டச் செயலாளர்கள் திரு. அப்புராஜ், திரு. பூமிநாதன், திரு. சண்முகம், திரு. பிரேம், திரு. குமரவேல், கிளை செயலாளர்கள் திரு. கிருஷ்ணமூர்த்தி, திரு. பரமகுரு, திரு. பாலகிருஷ்ணன், திரு. பன்னீர், திரு. தணிகாசலம், திரு. சங்கர், திரு. A.ஆனந்த், திரு. தங்கராஜ், திரு. பழனி, திரு. ரவி, திரு. நித்தியானந்தம், திரு . சதீஷ், திரு. வேலு, திரு. வினோத், நம்மவர் தொழிற்சங்க பேரவை நிர்வாகி திரு. யுவராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

#KamalHaasan
#MakkalNeedhiMaiam

Social Media Link

Twitter:  https://x.com/maiamofficial/status/1942848697420898654

Facebook: https://www.facebook.com/share/p/1F8t5k7o4U/

Instagram: https://www.instagram.com/p/DL4PGS0zkPB/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

Recent video







Share this post