கரூர் கூட்ட நெரிசலில் தங்களது இன்னுயிரை நீத்தவர்களின் குடும்பத்தாரை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், மாநிலங்களவை உறுப்பினர் திரு. கமல் ஹாசன் அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் சொன்னதோடு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணமும் அளித்தார்.
தலைவர் அவர்களின் கரூர் பயணத்தின் போது சந்திக்க இயலாமல் போன குடும்பங்களுக்கு, அவரது வழிகாட்டுதலின் படி கட்சியின் துணைத் தலைவர் திரு. R. தங்கவேலு மற்றும் கட்சி நிர்வாகிகள் கமல் பண்பாட்டு மையம் சார்பாக தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை நேற்று (08/10/2025) நேரில் வழங்கினர்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான காசோலையை வழங்குகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநிலச் செயலாளர் டாக்டர் மயில்சாமி, மண்டலச் செயலாளர்கள் திரு. ரவிச்சந்திரன், திரு. காமராஜ், திரு. அழகர், மண்டல அமைப்பாளர்கள் திரு. செந்தில் குமார், திரு. சிவ பாலகுரு, மாவட்டச் செயலாளர்கள் திரு. மோகன்ராஜ், திரு. வரதராஜ், திரு. அனஸ், திரு. சதீஸ்குமார், மாவட்ட அமைப்பாளர்கள் திரு. பிரசாந்த், மாவட்டத் துணை அமைப்பாளர் திரு. சூரிய பிரகாஷ் மற்றும் திரு. முருகேஷன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#KarurTragedy
#KarurStampede
Social Media Link
Twitter: https://x.com/maiamofficial/status/1976175023363670133
Facebook: https://www.facebook.com/share/p/17anLweLFu/
Instagram: https://www.instagram.com/p/DPlCMwaiUPL/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==