ஆசியப் போட்டிகளின் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவில் (Youth Asian Games Under 18) விளையாடத் தேர்வு செய்யப்பட்டுள்ள சென்னை கண்ணகி நகர் கபடி வீராங்கனை செல்வி. கார்த்திகா ரமேஷுக்குமக்கள் நீதி மய்யத்தின் வாழ்த்துக்கள்!

12 October 2025

மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல்ஹாசன் அவர்கள், சமீபத்தில், கபடிப் பயிற்சிக்கான ஆடுகளமில்லாதக் காரணத்தால் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பங்குபெறவியலாத நிலையில் இருந்த, சென்னை கண்ணகி நகர் கபடி வீராங்கனைகளுக்கு, செயற்கை ஆடுகளம் அமைத்திட, கமல் பண்பாட்டு மையத்தின் மூலம் ஏற்பாடு செய்தார்.

திரு. ராஜி அவர்கள் பயிற்சியாளராக வழிநடத்தி வரும் இந்தக் கபடிக் குழுவிலிருந்து, செல்வி. கார்த்திகா ரமேஷ், டெல்லியில் நடைபெறவுள்ள இளைஞர் ஆசியப் போட்டிகளின் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவில் (Youth Asian Games Under 18) விளையாடத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

முயற்சியும், பயிற்சியும் முன்னேற்றத்திற்கானப் படிகள் என்பதனை உணர்த்தும் வகையில், தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் ஊக்குவிப்பில், தமிழகத்திலிருந்து தேர்வாகி இருக்கும் ஒரே வீராங்கனையான, கண்ணகி நகர் கபடிக் குழுவின் கார்த்திகா ரமேஷுக்கு

மக்கள் நீதி மய்யத்தின் வாழ்த்துக்கள்!

#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam

Social Media Link

X: https://x.com/maiamofficial/status/1977708792784593160

Facebook: https://www.facebook.com/maiamofficial/posts/pfbid036PmUrsdeNprNPodaFoWBqkuR1jDy563dx4piLDArxjxq5SYbEA4qA1vHN7WwxpRkl

Instagram: https://www.instagram.com/p/DPv7sY0ieYJ/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

Recent video







Share this post