மக்கள் நீதி மய்யம் சார்பில் புதுப்பேட்டையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் பொதுமக்களுக்கு நீர் மோர், பழச்சாறு, தர்பூசணி விநியோகம்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களது வழிகாட்டுதல்படி, கட்சியின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி மநீம மாவட்டத்திற்குட்பட்ட புதுப்பேட்டை பகுதியில் மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. மேலும், கோடை வெயிலால் தவிக்கும் மக்களுக்கு நீர் மோர், பழச்சாறு, தர்பூசணி மற்றும் வெள்ளரிக்காய் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
மாவட்டச் செயலாளர் திரு. J. அப்துல் முசாஃபர் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் பொதுமக்கள் பலரும் கட்சியில் புதிய உறுப்பினர்களாக இணைந்தனர். மேலும் இராயபுரம் நகரச் செயலாளர் திரு. P.S.தண்டபாணி, மயிலாப்பூர் வட்டச் செயலாளர் திரு. திரு. சுந்தர்ராஜன் ஆகியோர் 500-க்கும் மேற்பட்டோருக்கு ஆரஞ்சு ஜூஸ், தர்பூசணி பழங்கள், வெள்ளரிக்காய் உள்ளிட்டவற்றை வழங்கினர்.,
இதற்கான ஏற்பாடுகளை வட்டச் செயலாளர்கள் திருமதி. உமா மகேஸ்வரி, நிர்வாகிகள் திரு. C.கமல், திரு. ஜோசப், திரு. தமீம் அன்சாரி, திரு. ரவிக்குமார், திரு. புஷ்பராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் மகளிரணி மாவட்ட அமைப்பாளர் திருமதி. ரூபா தேவி, வட்டச் செயலாளர்கள் திரு. கண்ணன், திரு. முஹமது சபியுல்லா, திரு. கலியமூர்த்தி, திரு. நிஜேந்திரன், நற்பணி அணி நிர்வாகி திரு. சுவாதி குமார், திரு. சரவணன் மற்றும் நிர்வாகிகள் திரு. மருதநாயகம், திரு. சுரேஷ் மற்றும் கட்சியினர் திரளாகப் பங்கேற்று சிறப்பித்தனர்.
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
Social Media Link
Twitter: https://x.com/maiamofficial/status/1917538351793733695
Facebook: https://www.facebook.com/maiamofficial/posts/pfbid0xjQgENpgBJ5724qe
PLnQruPGjAFKbNgq4qwsoFsFXhWQyjPiykBShaG9fZmTgGk5l
Instagram: https://www.instagram.com/p/DJEYzXQJuwg/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==