சட்டமன்ற நிகழ்வுகளை முழுமையாக நேரலை செய்யவேண்டும்!!
மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்!
நேற்றைய சட்டமன்றக் கூட்டத்தின்போது இரங்கல் தீர்மானங்கள் வாசிப்பு, மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழ்நாடு அரசின் தனி தீர்மானத்தின் மீதான விவாதங்கள் அனைத்தும் நேரலையில் ஒளிபரப்பப்பட்டன.
ஆனால் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கவர்னர் உரையின் மீதான விவாதங்களுக்கு நேரலை தரப்படவில்லை. சட்டமன்றத்தின் அனைத்து நிகழ்வுகளையும் அறிந்து கொள்ளும் உரிமை பொதுமக்களுக்கும், ஊடகங்களுக்கும் இருக்கிறது. ஆகவே, இனிவரும் நாட்களில் சட்டமன்றத்தின் அனைத்து நிகழ்வுகளையும் நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது. மேலும், நேரடி ஒளிபரப்பு குறித்து தொடர்ந்து பல ஆண்டுகளாக மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தி வருவதை நினைவு கூர்கிறோம்.
வெளிப்படைத் தன்மையோடு செயல்படவிரும்பும் தவெக அரசு இதனை உடனடியாகச் செயல்படுத்தும் என்று நம்புகிறோம்.
A.G.மெளரியா, I.P.S., (ஓய்வு)., @mouryamnm
துணைத் தலைவர்,
மக்கள் நீதி மய்யம்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
Social Media Link
X: https://x.com/i/status/2068213621486662069
Facebook: https://www.facebook.com/share/p/1absZabVxx/
Instagram: https://www.instagram.com/p/DZzArgyy-4g/?igsh=ZmRrZjZ4MDV4Y253