மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்களின் சமூகவலைதள பதிவின் தமிழாக்கம்.

25 July 2026
 

மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்களின் சமூகவலைதள பதிவின் தமிழாக்கம்.
 
மோதலுக்குப் பதிலாக பேச்சுவார்த்தை நடப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மாற்றுக்கருத்துக்களுக்குப் பேச்சுவார்த்தையே தகுதியானது. இதுவே ஜனநாயகத்தின் செயல்வடிவம்.

காந்தியார் பிறந்த இந்த மண்ணில், பெல்லட் துப்பாக்கிகள், மின்சார லத்திகள் மற்றும் ஆணிகள் பொருத்தப்பட்ட லத்திகளுக்கு இடமில்லை.

போலவே, பாதுகாப்புப் படையினர் மீதான தாக்குதல்கள் மற்றும் பொதுச்சொத்துகளுக்கு ஏற்படுத்தப்பட்ட சேதங்கள் குறித்தும் நியாயமான முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும். ‘பொறுப்பேற்றுக்கொள்ளுதல்’ ஒருதலைப்பட்சமாக மட்டும் இருக்கமுடியாது.

இந்தத் தருணமும் வாய்ப்பும் வினாத்தாள் கசிவை விட மிகப்பெரியது. தேர்வு முறைகள் மீது மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்தவும், மாணவர்களின் கல்வி மன அழுத்தத்தைக் குறைக்கவும், கல்வியை நவீனப்படுத்தவும் 'தேசிய கல்வி மற்றும் தேர்வு சீர்திருத்த ஆணையம்' அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இது மூன்று மாத காலத்திட்டத்தைக் கொண்டு செயல்பட வேண்டும். மேலும், நீட் நுழைவுத்தேர்வின் மனித உயிர்ப் பலியை தங்கை அனிதாவின் மரணம் மூலம் முதலில் உணர்ந்த தமிழ்நாட்டின் குரலையும் இந்த ஆணையம் கேட்க வேண்டும்.

பேச்சுவார்த்தைக்கான அரசின் விருப்பம் வரவேற்கத்தக்கது. இந்தப் பேச்சுவார்த்தை ஒரு நிலையான சீர்திருத்தத்திற்கு வழிவகுப்பதை நாம் உறுதி செய்வோம். நாம் போகவேண்டிய தொலைவு அதிகம், இந்தியர்களாகிய நாம் அனைவரும் இணைந்து பயணிப்போம்.
 
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#DoBetterIndia
#EducationReform

Social Media Link 

X: https://x.com/maiamofficial/status/2080930187693510669?s=20

Facebook: https://www.facebook.com/share/p/1Da1yG1wG8/

Instagram: https://www.instagram.com/p/DbNXbk_mn7z/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

Recent video







Share this post