அண்ணல் காந்தியடிகள் பெயரை நீக்கி 100 நாள் வேலை திட்டத்தை ஒழிக்க சட்டத்தைக் கொண்டுவந்த, ஒன்றிய பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

25 December 2025

மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தில் (100 நாள் வேலை திட்டம்) காந்தியடிகளின் பெயரை நீக்கி சட்டமியற்றியுள்ள ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில்,

நேற்று சேலம் மண்டலத்திற்குட்பட்ட சங்ககிரி ம.நீ.ம. மாவட்டம் மகுடஞ்சாவடி ஊராட்சியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மக்கள் நீதி மய்யம் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல்ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி,

சேலம் மண்டலச் செயலாளர் திரு. காமராஜர் அவர்களின் அறிவுறுத்தல்படி சேலம் மண்டலத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் ஒன்றியச் செயலாளர் திரு. சரவணன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்று, ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்ட முழக்கமிட்டனர்...

#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam

Social Media Link

X: https://x.com/i/status/2004225943465087464

Facebook: https://www.facebook.com/share/p/1C5zT84L9V/

Instagram: https://www.instagram.com/p/DSsWSajiaqa/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

Recent video







Share this post