வேளச்சேரியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா!

13 January 2026

வேளச்சேரியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல்ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி,

வேளச்சேரி மக்கள் நீதி மய்யம் சார்பில், மாவட்டச் செயலாளர் திரு. பாலமுருகன் அவர்கள் தலைமையில், மாவட்டத் துணைச் செயலாளர் திரு. ஹரிஷ் அவர்கள் ஏற்பாட்டில் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தலைமை நிலையச் செயலாளர் திரு. செந்தில் ஆறுமுகம் அவர்கள், சென்னை மண்டலச் செயலாளர் திரு. மயில்வாகனன் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,

சுவையான பொங்கல் வைத்து, பொதுமக்களுக்கு சேலை மற்றும் முழுக் கரும்பு வழங்குதல் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 

இந்நிகழ்வில் வேளச்சேரி மாவட்டத் துணைச் செயலாளர் திரு. சண்முகசுந்தரம், மாவட்ட அமைப்பாளர்கள் திரு. பிரசாத், திருமதி. பத்மா, நகர செயலாளர் திரு. முகிலன், வட்டச் செயலாளர் திரு. அசோக், திரு. லோகநாதன், கிளைச் செயலாளர்கள் திருமதி. சூர்யா, திருமதி. ராஜலட்சுமி, திருமதி. பச்சையம்மாள், திருமதி. மதனா, ஆகியோருடன் மாவட்ட, மாநகர, வட்ட, கிளை நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

#KamalHaasan 
#KamalHaasan_MP 
#MakkalNeedhiMaiam

Social Media Link

X: https://x.com/i/status/2011024219954696532

Facebook: https://www.facebook.com/share/p/17zmazz61R/

Instagram: https://www.instagram.com/p/DTcppzziaSe/?igsh=MWF3cW42OXJjc3Z6cw==

Recent video







Share this post