மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. @ikamalhaasan அவர்களின் தலைமையில் நடைபெற்ற,
2026 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் தொடர்பான நிர்வாகிகள் கலந்தாலோசனைக் கூட்டத்தில், மாணவர் அணியை வலுப்படுத்தும் விதமாக,
மாணவர் அணி மாநிலச் செயலாளர் திரு. @rakeshrajasekaran அவர்களின் முன்னெடுப்பில்,
2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி, மாணவர் அணியின் பங்களிப்பு மேலும் வலுவாக அமைய வேண்டும் என்ற தீர்மானத்துடன், மாணவர்கள் அனைவரும் பொறுப்புணர்வுடன் முன்னேறுவோம் என்ற உறுதியை வெளிப்படுத்தும் விதமாக,
அணியின் மண்டல, மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் NEXT GEN COMMITMENT CARD எனும் உறுதிமொழி படிவத்தை பூர்த்தி செய்து, தலைவரின் பார்வைக்கு சமர்பித்தனர்.
நிகழ்வில் கட்சியின் துணைத் தலைவர்கள் திரு. A.G.மௌரியா IPS (Retd) அவர்கள், திரு. தங்கவேலு அவர்கள், கட்சியின் பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் அவர்கள், மாநில, மண்டல, மாவட்ட, நகர, ஒன்றிய, வட்ட, கிளை நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#Elections2026
Social Media Link
Twitter: https://x.com/maiamofficial/status/1970475939080610203
Facebook: https://www.facebook.com/share/p/1F5uiEbLKG/
Instagram: https://www.instagram.com/p/DO8ilsfiS1P/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==