இன்று (19.12.2025) மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் எம்.பி @ikamalhaasan அவர்கள் வெளியிட்ட, சமூக வலைதள பதிவின் தமிழாக்கம்:
‘நீண்ட கால ஆற்றல் பாதுகாப்பு’ இந்தியாவின் முதன்மையான மூலதனமாக இருத்தல் வேண்டும்.
2047 ஆம் ஆண்டுக்குள் அணுசக்தி திறனை 100 ஜிகாவாட்டாக உயர்த்தும் திட்டம், தோரியம் அடிப்படையிலான அணு உலைகளுக்கான கால நிரல் (timeline) மற்றும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் கல்பாக்கம் போன்ற பகுதிகளில் ஏற்படும் சுற்றுச்சூழல் விளைவு, சமூகப்பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தேன்.
மத்திய அணுசக்தித் துறை இணையமைச்சர், மாண்புமிகு @ddrjitendrasingh அவர்கள் பதிலளித்துள்ளார்.
தோரியம் அடிப்படையிலான அணுசக்தி தொழில்நுட்பத்தில் நாம் அடையும் முன்னேற்றம் கச்சா எண்ணெய் இறக்குமதியை சார்ந்திருக்கும் நிலைமையைக் கட்டுப்படுத்தவும், இந்தியாவின் ஆற்றல் தன்னிறைவுக்கும் தேசத்தின் வளர்ச்சிக்கும் அத்தியாவசியமானது.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
Social Media Link
X: https://x.com/maiamofficial/status/2001959665589272766?s=20
Facebook: https://www.facebook.com/share/p/19iEspaa2r/
Instagram: https://www.instagram.com/p/DScQWW2id2s/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==