நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்கவிருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள், இன்று (18-07-2025) ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்திற்கு வருகை புரிந்தார்.
இந்த வருகையின் போது, கட்சியின் விளையாட்டு மேம்பாட்டு அணி மாநிலச் செயலாளர் திரு. E.T. அரவிந்த்ராஜ் அவர்கள், அணியின் புதிய சின்னத்தை (logo) தலைவரின் பார்வைக்கு சமர்ப்பித்து ஒப்புதல் பெற்றார்.
இந்நிகழ்வில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் திரு. A.G.மௌரியா, பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம், மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநிலச் செயலாளர்கள் திரு. செந்தில் ஆறுமுகம், திரு. முரளி அப்பாஸ், திரு. மூர்த்தி, திரு. ராகேஷ் ராஜசேகரன், திரு. லஷ்மன், சென்னை மண்டலச் செயலாளர் திரு. மயில்வாகனன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
Social Media Link
Twitter: https://x.com/maiamofficial/status/1946226704223174742
Facebook: https://www.facebook.com/share/p/19gbidg5uV/
Instagram: https://www.instagram.com/p/DMQPK57pP4v/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==