வில்லிவாக்கம் மநீம மாவட்டத்தில் மாபெரும் மருத்துவ முகாம் மற்றும் மதிய உணவு வழங்கும் நிகழ்வு.

23 December 2025

வில்லிவாக்கம் மநீம மாவட்டத்தில் மாபெரும் மருத்துவ முகாம் மற்றும் மதிய உணவு வழங்கும் நிகழ்வு.

மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக,

வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி, 97வது வட்டத்திற்கு உட்பட்ட பச்சைக்கல் வீராசாமி தமிழ்நாடு குடியிருப்பு மைதானத்தில்,

மக்கள் நீதி மய்யம் சார்பில், காவேரி மருத்துவமனையுடன் இணைந்து மாபெரும் மருத்துவ முகாம் மற்றும் பொது மக்களுக்கு மதியம் உணவு வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றன.

சென்னை மண்டல செயலாளர் திரு. மயில்வாகனன் தணிகைவேல் மற்றும் பொறியாளர் அணி சென்னை மண்டல அமைப்பாளர் திரு. P.சரவணக்குமார் ஆகியோரின் தலைமையில்,
நம்மவர் தொழிற்சங்கப் பேரவை மாநிலத் துணை ஒருங்கணைப்பாளர் திரு. K.மாடசாமி, வில்லிவாக்கம் மநீம மாவட்ட துணை செயலாளர் திரு. G.விசுவநாதன், மாவட்ட பொருளாளர் திரு. R.ஹரிதாஸ் ஆகியோரின் முன்னிலையில்,

நற்பணி அணி மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. G.நாகராஜன் அவர்களும், பொறியாளர் அணி மாநிலச் செயலாளர் டாக்டர் S.வைத்தீஸ்வரன் அவர்களும், மீனவர் அணி மாநிலச் செயலாளர் திரு. R.பிரதீப் குமார் அவர்களும் இம்முகாமை துவக்கி வைத்தனர்.

ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் பெற்று பயனடைந்தனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வுகளில் கட்சியின் வழக்கறிஞர் அணி மண்டல அமைப்பாளர் திரு. சேகர், ஆதிதிராவிடர் நல அணி மண்டல அமைப்பாளர் திரு. ரூபலிங்கம், நம்மவர் தொழிற்சங்க பேரவையின் மாநில துணை ஒருங்கிணைப்பாளர் திரு. யுவராஜ், வில்லிவாக்கம் மாவட்டத்தின் நகரச் செயலாளர்கள் திரு. ரமேஷ் காந்தி, திரு. சரவணன், திருமதி. வாணி, வட்டச் செயலாளர்கள் திரு. அருள், திரு. கோட்டீஸ்வரன், திரு. செல்வராஜ், திருமதி. ஈஸ்வரி, திருமதி. செல்வி, திருமதி. மீனா, திரு. அசோகன், கொளத்தூர் மநீம மாவட்டப் பொருளாளர் திரு. ராவ், மாவட்ட அமைப்பாளர்கள் திரு. சதீஷ்குமார், திரு. ராமநாதன், நகரச் செயலாளர் திரு. ராஜேந்திரன், திரு. ராஜா, திருவொற்றியூர் மநீம மாவட்ட அமைப்பாளர் திரு. குமரன், தொழிலதிபர் திரு. சபரிநாதன் மற்றும் மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, வட்ட, கிளை நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam

Social Media Link

X: https://x.com/i/status/2003406031658123425

Facebook: https://www.facebook.com/share/p/1AsPawr2T4/

Instagram: https://www.instagram.com/p/DSmhJQribIJ/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

Recent video







Share this post