மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி,
விருதுநகரில் மாபெரும் இரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டச் செயலாளர் திரு. காளிதாஸ் அவர்களின் தலைமையில்,
நகர செயலாளர் திரு. கமல் கண்ணன், ஒன்றியச் செயலாளர் திரு. நாகேந்திரன் ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இம்முகாமை,
நெல்லை மண்டலச் செயலாளர் டாக்டர். பிரேம்நாத் அவர்கள் தொடங்கி வைத்தார்.
தொழில் முனைவோர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. பன்னீர் செல்வம், நம்மவர் தொழிற்சங்கப் பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. சொக்கர் ஆகியோரின் முன்னிலையில், இரத்த தானம் செய்த 200-க்கும் மேற்பட்ட குருதிக் கொடையாளர்களுக்கு தலைகவசம் மற்றும் ஊக்க பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் சமூக ஊடக அணி மாவட்ட அமைப்பாளர் திரு. நெல்சன் தாஸ், ஆதிதிராவிட அணி மாவட்ட அமைப்பாளர் திரு. பன்னீர், நற்பணி அணி மாவட்ட துணை அமைப்பாளர் திரு. நடராஜன், அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நகர, வட்ட, கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
Social Media Link
X: https://x.com/maiamofficial/status/1998038891027370195?s=20
Facebook: https://www.facebook.com/share/p/16bwTarhUc/
Instagram: https://www.instagram.com/p/DSAY_OwCR3Q/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==