எப்போதும் அண்மையில் இருக்கும் இளைய சகோதரர் @Seeman4TN. பிறந்த பிரதேசமானாலும் சரி, தேர்ந்துகொண்ட திரைத்துறையானாலும் சரி பக்கத்திலேயே பயணம் செய்பவர்.
பின்பற்றும் கொள்கையில் இவர் காட்டும் பிடிமானமும் பிடிவாதமும் வியத்தலுக்குரியவை.
தான் தோன்றுவது எந்த அரங்காக இருந்தாலும் அதில் புகழொடு தோன்றும் பண்பும் திறனும் மிக்க அன்புத் தம்பி, நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர், செந்தமிழன் சீமான் அவர்களுக்கு இன்று பிறந்தநாள். இந்நாளில் அவரை அணைத்து வாழ்த்துவது எனக்கு மகிழ்ச்சி.
நீடு வாழ்க இளவல்.
Social Media Link
X: https://x.com/ikamalhaasan/status/1987064286649459130?s=20