மகளிர் கிறித்தவக் கல்லூரி நிகழ்வில் பங்கேற்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்கள்.

14 February 2026
 
S

மகளிர் கிறித்தவக் கல்லூரி நிகழ்வில் பங்கேற்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்கள்.
(14.02.2026)

மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்கள்,

இன்று நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள மகளிர் கிறித்தவக் கல்லூரியில் நடைபெற்ற FESTIVE 2026- GOLDEN JUBILEE நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

நிகழ்வில் சிறப்புரையாற்றிய தலைவர் அவர்கள், சமூகம், அரசியல், பெண்ணுரிமை உள்ளிட்ட மாணவிகளின் கேள்விகளுக்கு சிறப்பாக பதிலளித்தார்.

கட்சியின் சார்பில் மாணவர் அணி மாநிலச் செயலாளர் திரு. ராகேஷ் ராஜசேகரன் அவர்கள் இந்நிகழ்வினை ஒருங்கிணைத்தார்.

இதில் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் அவர்கள், மாநிலச் செயலாளர்கள் திரு. செந்தில் ஆறுமுகம், திரு. சினேகன், திரு. முரளி அப்பாஸ் ஆகியோருடன் மாணவர் அணி மண்டல அமைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் இறுதியாக தலைவர் அவர்களின் தயாரிப்பில் உருவான “LEAD ON GANDHI” என்ற ஆவணப்படம், மாணவிகளின் முன்னிலையில் திரையிடப்பட்டது.

- ஊடகப் பிரிவு,
மக்கள் நீதி மய்யம்.

Download Link


Recent video







Share this post