நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் சார்பாக மே தின விழா!

1 May 2024
 
S

வணக்கம், 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் சார்பாக இன்று (01-05-2024) காலை 10 மணியளவில் ஆழ்வார்பேட்டை கட்சித் தலைமை அலுவலகத்தில் மே தின விழாவானது சிறப்பாக நடைபெற்றது.

நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.R.சொக்கர் அவர்கள் தலைமையில், துணைத்தலைவர் திரு. A.G. மௌரியா I.P.S. (Retd) அவர்கள், நம்மவர் கொடியேற்றி தொழிற்சங்கப் பேரவையின் கொடியை ஏற்றி வைத்தார். 

நிகழ்வில் நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் பொதுச்செயலாளர் திரு.V.ரவிசந்திரன், மாநில பொருளாளர் திருமதி.M.பானுமதி, மாநில துணை ஒருங்கிணைப்பாளர்கள், மாநில துணைச் செயலாளர்கள், நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் நிர்வாகிகள் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், மய்யம் இ.சி.எப் தொழிற்சங்கம் தலைவர் திரு.K.மாடசாமி, மநீம நகைத் தொழிலாளர் சங்கம் தலைவர் திரு.D.சேகர், ராஜலட்சுமி அம்மையார் மய்யம் மகளிர் சங்கம் தலைவி திருமதி.சங்கீதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதனையொட்டி ஆட்டோ ஓட்டுநர்களுக்கு காக்கி சீருடை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

ஊடகப்பிரிவு,
மக்கள் நீதி மய்யம்.

Download PDF


Recent video







Share this post