5-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நம்மவர் தொழிற்சங்கப் பேரவைக்கு வாழ்த்துகள்!
உயிரே உறவே தமிழே!
வணக்கம்!
தொழிலாளர் நலன்காக்கும் பணியில் தொய்வில்லாது உழைத்துவரும் மக்கள் நீதி மய்யத்தின் நம்மவர் தொழிற்சங்கப் பேரவை 5-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த மகத்தான தருணத்தில் பேரவையை வழிநடத்திடும் நிர்வாகிகள், இணைப்புத் தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த வாழ்த்துகள் உரித்தாகுக.
சிந்தும் வேர்வையால் உலகைச் செழுமையாக்கும் தொழிலாளர் நலன்களைக் காத்திட மக்கள் நீதி மய்யமும், நம்மவர் தொழிற்சங்கப் பேரவையும் என்றென்றும் களத்தில் போராடுமென உறுதியளிக்கிறோம். மென்மேலும் பல தொழிற்சங்கங்களை நம்மவர் பேரவையில் இணைத்துக்கொண்டு ஆற்றலுடன் பணியாற்றுவோம்!
தொழிலாளர் ஒற்றுமை ஓங்கட்டும்!
நாளை நமதே!
உங்கள் நான்,
கமல் ஹாசன்
தலைவர் - மக்கள் நீதி மய்யம்.
15-07-2025