ஓட்டையும் நாட்டையும் இந்தத் தமிழன் கமல் ஹாசன் விற்கவே மாட்டான்.

6 பிப்ரவரி, 2026

ப்ரிய சகோதரி, பவதி பிக்‌ஷாந்தேகி என்று தெலுங்கில் இசை பாடி வந்த அந்த மாமனிதர் இசை மேதை தியாகராஜன். அவர் பிக்‌ஷா பாத்திரத்திலிருந்து எடுத்த சில்லறைகள் நவீன காலத்திற்கு உதவாது என்று தெரிந்தவர்கள் நீங்கள். நீங்கள் வெள்ளைக்கார கல்வி கற்றது கண்டிப்பாய் கற்பூர புத்திதான். 
 
அது காற்றோடு போய் பல ஆண்டுகளாகிவிட்டன. அதன் பிறகு உங்கள் பிச்சைப்பாத்திரம் உருமாற்றப்பட்டது. பிச்சைக் குவளை, பெரும் உண்டியலானது. அந்த உண்டியலையும் உடைத்து நிதி திரட்ட உதவுவோர், இன்று தமிழை, தமிழரைப் பார்த்து என்ன சொன்னீர்கள்? 

தமிழ் பிச்சை எடுக்கக் கூட உதவாதா? ஓரளவு உண்மைதான் தங்காய்… 
ஒரு தெக்கத்தி அறிவுரை தங்காய்.. 
தமக்கென உங்கள் நிதியைத் திரட்ட ஆங்கிலத்தில் இந்தியில் பிச்சை எடுக்கலாமே
தமிழ் பிச்சை எடுக்க உதவாது. திருடவும் உதவாது. 
தமிழன் பிச்சை எடுக்கமாட்டான். அதுவும், உங்கள் பிச்சையை ஏற்கவே மாட்டான். 
தங்கச்சி! ஓட்டையும் நாட்டையும் இந்தத் தமிழன் கமல் ஹாசன் விற்கவே மாட்டான்.

உங்கள் சாபங்களில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. உங்களுக்கு இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையில், நீங்கள் உணர என் திட்டத்தை சாபமாய்ப் போடுகிறேன். கருணையுடன் நீங்களே ஏற்பீர்.

உங்கள் இஷ்ட தெய்வங்களை வேண்டிக்கொள்ளுங்கள். பகுத்தறிந்த தமிழ்ச் சித்தன் கூற்று இது.

உம் வினை உம்மைச் சுடுக. என்றும் எங்கள் நாடு நீடூழி வாழும்.
உம் வினை உம்மைச் சுடுக. ஓட்டப்பம் உம் வீட்டைச் சுடுக.
வந்தீர்.. வென்றீர்.. செல்வீர்!
இது உலக நியதி. அரசியல்நீதியும் கூட.
வீழ்க வளமுடன்.
தமிழ் என்றும் வாழும் நலமுடன்.
வணக்கம் அவை வந்தடைந்த தலைவர் கூட்டத்திற்கு…
சென்றும், வருவேன்.
நாளை எமதே
உங்கள்
கமல் ஹாசன். 
ஜெய் ஹிந்த். 

- மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல் ஹாசன் எம்.பி அவர்கள்.

#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#RajyaSabha

Social Media Link

X: https://x.com/maiamofficial/status/2019795722468569568?s=20

Facebook: https://www.facebook.com/share/v/1HUXEoE11E/

Instagram: https://www.instagram.com/reel/DUa-tX0CVs7/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

சமீபத்திய காணொளி







Share this post