மக்கள் நீதி மய்யம் கட்சியின் கோவை தெற்கு மாவட்ட 50-வது செயற்குழுக் கூட்டம்.

4 அக்டோபர், 2024

மக்கள் நீதி மய்யம் கட்சியின் கோவை தெற்கு மாவட்ட 50-வது செயற்குழுக் கூட்டம், துணைத் தலைவர் திரு. தங்கவேலு அவர்கள் தலைமையிலும், மண்டலச் செயலாளர் திரு. ரங்கநாதன் அவர்கள் முன்னிலையிலும் கட்சி அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்துக்கான ஏற்பாடுகளை மாவட்டச் செயலாளர் திரு.பிரபு அவர்கள் செய்திருந்தார்.
இக்கூட்டத்தில், கட்சியின் மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, வட்ட, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கடந்த செப்டம்பர் 21-ம் தேதி சென்னையில் நடைபெற்ற, கட்சியின் 2-வது பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில், உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்துதல், கட்சிக் கொடி ஏற்றுதல், பூத்கமிட்டி நியமனம் செய்தல், புதிய பொறுப்பாளர்கள் நியமனம், 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்தின் ஆபத்து குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களைச் செயல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

#KamalHaasan
#MakkalNeedhiMaiam

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1842109930264002912

Facebook: https://www.facebook.com/share/p/bzPLVdKgUuA6pNMh/

Instagram: https://www.instagram.com/p/DAsce2oJxnk/?utm_source=ig_web_copy_link

சமீபத்திய காணொளி







Share this post