சென்னை சைதாப்பேட்டையில், மக்கள் நீதி மய்யம் சார்பில் கல்விக் கட்டண மற்றும் நலத்திட்ட உதவிகள்.

6 ஆகஸ்ட், 2024

மக்கள் பணியில், மக்கள் நீதி மய்யம் !

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில், சென்னை சைதாப்பேட்டையில் வறிய நிலையில் உள்ள 
3 மாணவிகளுக்கு தலா ரூ.10,000 கல்விக் கட்டண உதவி, 500 பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அறுசுவை உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்வில், சிறப்பு விருந்தினராக மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் திரு.ஏ.ஜி.மௌரியா Retd. IPS அவர்கள் கலந்துகொண்டார்.

மேலும், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் திருமதி.சினேகா மோகன்தாஸ், மாணவரணி மாநிலச் செயலாளர் திரு. ராகேஷ் ராஜசேகரன் மற்றும் சென்னை மண்டல நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வை சைதாப்பேட்டை திரு. கதிர் அவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்து, முன்னின்று நடத்தினார்.

இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

#KamalHaasan
#MakkalNeedhiMaiam

 Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1820704286965412055

Facebook: https://www.facebook.com/share/p/9fJMpn64TAEMd5gX/

Instagram: https://www.instagram.com/p/C-UW4b-v2BU/?igsh=MW9mZzBheGRuemRjMA==

சமீபத்திய காணொளி







Share this post