பரமக்குடி வேந்தோணி கிராமத்தில் ‘நம்மவர் படிப்பகம்' திறப்பு விழா.

26 ஜனவரி, 2025

பரமக்குடி வேந்தோணி கிராமத்தில் ‘நம்மவர் படிப்பகம்' திறப்பு விழா.

தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஊரிலும் படிப்பகம் தொடங்க வேண்டும் என்ற மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களது சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில், இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள வேந்தோணி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள ‘நம்மவர் படிப்பகம்' திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது.

கமல் பண்பாட்டு மையம் மற்றும் வடஅமெரிக்க கமல் ஹாசன் நற்பணி இயக்கம் சார்பில் டிஜிட்டல் நூலகத்துடன் கூடிய, திறன் மேம்பாட்டு மையமாக அமைக்கப்பட்டுள்ள இந்தப் படிப்பகத்தை, கமல் பண்பாட்டு மைய அறங்காவலர்கள் திரு. நாராயணன் வள்ளியப்பன், திரு. E.அக்பர் அலி, வடஅமெரிக்க கமல் ஹாசன் நற்பணி இயக்க நிர்வாகக்குழு உறுப்பினர் திரு. வெங்க்கி ரங்கநாதன் ஆகியோர் திறந்துவைத்தனர்.

இந்த நிகழ்வில், மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர் திரு. R.தங்கவேலு, பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம், தலைமை நிலைய மாநிலச் செயலாளர் திரு. செந்தில் ஆறுமுகம், ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு மாநிலச் செயலாளர் திரு. முரளி அப்பாஸ், மதுரை மண்டலச் செயலாளர் திரு. M.அழகர், பொறியாளர் அணி மாநிலச் செயலாளர் திரு. S.வைத்தீஸ்வரன், மகளிர் அணி மாநிலச் செயலாளர் திருமதி. மூகாம்பிகா ரத்தினம், தொழில்முனைவோர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. P.பன்னீர் செல்வம், மாணவர் அணி மாநிலச் செயலாளர் திரு. ராகேஷ் ராஜசேகரன், சமூக ஊடக அணி மாநிலச் செயலாளர் திரு. R. லஷ்மன், நம்மவர் தொழிற்சங்கப் பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. R.சொக்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், கட்சியின் நற்பணி அணி மதுரை மண்டல அமைப்பாளர் திரு. J.சிவபாலகுரு, சமூக ஊடக அணி மதுரை மண்டல அமைப்பாளர் திரு. P.ராஜா, இளைஞர் அணி மதுரை மண்டல அமைப்பாளர் திரு. M.பரணிராஜன், மகளிர் அணி மதுரை மண்டல அமைப்பாளர் திருமதி. பத்மா ரவிச்சந்திரன், மாவட்டச் செயலாளர்கள் திரு. கதிரேசன், திரு. விஜயராஜன், திரு. முத்துகிருஷ்ணன், திரு. மணி, திரு. சிவக்குமார், திரு. நம்மவர் செந்தில், திரு. சிவாஜி, திரு. சரவணன், திரு. அயூப்கான் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாகப் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

#KamalHaasan
#MakkalNeedhiMaiam
#நம்மவர்_படிப்பகம்

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1883806868952551777

Facebook: https://www.facebook.com/share/p/1B6YSKkoa5/

Instagram: https://www.instagram.com/p/DFUuOatJGVA/?utm_source=ig_web_copy_link

சமீபத்திய காணொளி







Share this post