சர்வதேச கேரம் போட்டியில் மூன்று தங்க பதக்கங்களை வென்று சாதனை படைத்த செல்வி. கீர்த்தனா அவர்களுக்கு வாழ்த்துகள்.
மக்கள் நீதி மய்யம் தலைவர், மாநிலங்களவை உறுப்பினர் திரு. கமல் ஹாசன் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில்,
மாலத்தீவில் நடைபெற்ற சர்வதேச கேரம் போட்டியில், தனி நபர் ஆட்டம் மற்றும் குழு ஆட்டம் என மொத்தமாக மூன்று தங்க பதக்கங்களை வென்று சாதனை படைத்த, சென்னை தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்த செல்வி. கீர்த்தனா அவர்களை,
கட்சியின் விளையாட்டு மேம்பாட்டு அணியின் சார்பில், மாநிலச் செயலாளர் திரு. அரவிந்ராஜ், சென்னை மண்டல அமைப்பாளர் திரு. அரவிந்தன் ராம்குமார், இராயபுரம் மாவட்டச் செயலாளர் திரு. மாறன் ஆகியோர், சமூக ஊடக அணி மாவட்ட அமைப்பாளர் திரு. U. பிரேம் ஆகியோர்,
செல்வி. கீர்த்தனா அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டனர். பயிற்சியாளர் திரு. நித்யன் அவர்களையும் சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
மேலும் குடும்ப சூழல் காரணமாக பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய செல்வி. கீர்த்தனா மீண்டும் படிப்பை தொடர அறிவுறுத்தியதுடன், அதற்கான உதவிகளை மக்கள் நீதி மய்யம் கட்சியின் விளையாட்டு மேம்பாட்டு அணியின் சார்பில் செய்வதாக உறுதி அளிக்கப்பட்டது.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
Social Media Link
X: https://x.com/i/status/2000505424227783076
Facebook: https://www.facebook.com/share/p/1Ed16XXPzE/
Instagram: https://www.instagram.com/p/DSR6DxHCfZD/?igsh=MTd6MXYwYmt2YXVlbg==