மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்களின், சமூக வலைதளப் பதிவின் தமிழாக்கம்:
ஒரு குழந்தை அழுதபோதே நாம் அதைக் கேட்டிருக்க வேண்டும்.
ஆனால், அதற்குப் பதிலாக நமது குழந்தைகள் பலர் உயிரை இழக்கும் வரை நாம் காத்திருந்துவிட்டோம்.
கற்றலுக்குப் பதில் பயிற்சி மையங்களும் (coaching), ஆர்வமுடன் ஒன்றைத் தெரிந்து கொள்வதற்குப் பதில் பதற்றமும், திறமைக்குப் பதில் குற்றச்செயல்களும் நிறைந்திருக்கும் ஒரு கட்டமைப்பு முற்றிலும் சீரழிந்துவிட்டது.
தங்கள் கேள்விகளுக்குப் பதில்களை எதிர்பார்க்கும் குழந்தைகளை, தடுப்புகளாலும் லத்திகளாலும் எதிர்கொள்ளும் போது ஒரு நாடு தோற்றுவிட்டது என்றுதான் அர்த்தம்.
@Wangchuk66, இனிவரும் பயணத்திற்கு இந்த நாட்டிற்கு உங்களுடைய மனசாட்சி தேவை. தயவுசெய்து உங்கள் உண்ணாவிரதத்தை முடியுங்கள்.
இந்தியாவின் குழந்தைகளுக்கு: நீங்கள்தான் நமது நாட்டின் சிறந்த எதிர்காலம். நீங்கள் உங்கள் கடமையைச் செய்துவிட்டீர்கள். இனி இந்த நாடு உங்களுக்கான கடமையைச் செய்ய வேண்டிய நேரம் இது. உங்களின் கனவுகள் எப்போதும் எங்களது தவறுகளை விடப் பெரியதாக இருக்கட்டும்.
@Cockroachisback
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#CJP
#CJPProtest
#NEET
#NeetProtest
Social Media Link
X: https://x.com/maiamofficial/status/2080194915825545516?s=20
Facebook: https://www.facebook.com/share/p/1Cz6bwgJpj/
Instagram: https://www.instagram.com/p/DbII_HummfU/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==