மக்கள் நீதி மய்யம் சார்பாக தாம்பரத்தில் கொடியேற்றுதல், தண்ணீர் பந்தல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை.

16 ஏப்ரல், 2023

காஞ்சி மண்டல பொறியாளர் அணி அமைப்பாளர் திரு.அரவிந்ராஜ் சோழிங்கநல்லூர் மாவட்ட பொறுப்பாளர் திரு. பிரவின் மார்கஸ், நகர செயலாளர் திரு.D.முனிதேவன், வட்ட செயலாளர் திரு.வெங்கட், ஒன்றிய செயலாளர் திரு.C.P.மணிமாறன், வட்ட செயலாளர் திரு.ராஜலிங்கம் அவர்கள் ஏற்பாட்டில் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளர்களாக பொதுச்செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம், துணைத் தலைவர் திரு. ஏ.ஜி.மௌரியா IPS (ஒய்வு), மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. நாகராஜன், மாநில செயலாளர்கள் (அமைப்பு) திரு. சிவ இளங்கோ, (பொறியாளர் அணி) திரு. வைத்தீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

நகர செயலாளர் திரு. ராமகிருஷ்ணன் 20 புதிய உறுப்பினர்களை தாம்பரம் தொகுதி சார்பாக நம் கட்சியில் இணைத்துள்ளார். நிகழ்ச்சியில் சமூக ஊடக மண்டல அமைப்பாளர் திரு. மௌலி, நற்பணி இயக்க மாவட்ட அமைப்பாளர் திரு.ஜெயவேல் அவர்களுடன் மய்ய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.​

Social Media links

Twitter: https://twitter.com/maiamofficial/status/1647950181219049472?t=kXOQGqBiD4G-5Ki3uoRTIw&s=19

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0XaALt98PbRGrHjt2REYdpx5a22iHzm4qrnRd7KAcjKKV2z4BxwdagEdSv6x2q4ENl&id=100064900236042&mibextid=Nif5oz

Instagram: https://www.instagram.com/p/CrI22o7Sv7Q/?igshid=YmMyMTA2M2Y=

சமீபத்திய காணொளி







Share this post