மக்கள் நீதி மய்யம் சார்பில் சேத்துப்பட்டு பகுதியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கால்பந்து போட்டி.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களது வழிகாட்டுதல்படி, போதை ஒழிப்பு விழிப்புணர்வு கால்பந்துப் போட்டி சென்னை சேத்துப்பட்டு அம்பேத்கர் திடலில் ஏப். 27-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பாக நடைபெற்றது. இப்போட்டியை கட்சியின் துணைத் தலைவர் திரு. A.G.மௌரியா. (IPS Retd.) அவர்கள், சென்னை மண்டலச் செயலாளர் திரு. மயில்வாகனன் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை மக்கள் நீதி மய்யம் நகரச் செயலாளர்கள் திரு. கமல் (108-வது வார்டு), திரு. ராமச்சந்திரன் (77-வது வார்டு), 108-வது வார்டு வட்டச் செயலாளர்கள் திரு. சிங்காரவேலன், திரு. லாரன்ஸ், கிளைச் செயலாளர் திரு. பாஸ்கர், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளர் திரு. வெங்கடேஷ்வரி, இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் திரு. சிலம்பரசன், மாவட்டப் பொருளாளர் திரு. ஜாபர் அலி, ஆதிதிராவிடர் அணி நகர அமைப்பாளர் திரு. தினேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில், 58-வது வார்டு வட்டச் செயலாளர் திரு. வின்சென்ட், 99-வது வார்டு வட்டச் செயலாளர் திருமதி சுப்புலட்சுமி, கிளைச் செயலாளர்கள் திருமதி சிந்தனை செல்வி, திருமதி சுகன்யா, 108-வது வார்டு கிளைச் செயலாளர் திரு. விஜய், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் திரு. சஞ்சய், திருமதி. நிவேதா, மாவட்ட துணைச் செயலாளர் திரு. மோசஸ், 99-வது வார்டு கிளைச் செயலாளர்கள் திருமதி. சுதா, திருமதி. லட்சுமி, திரு. அரவிந்தன், திரு. அப்பு மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
Social Media Link
Twitter: https://x.com/maiamofficial/status/1916757974489481574
Facebook: https://www.facebook.com/share/p/18je9DhR8w/
Instagram: https://www.instagram.com/p/DI-2TeHpevc/?utm_source=ig_web_copy_link