மக்கள் நீதி மய்யம் சார்பில் எழும்பூரில் இ-சேவை, உறுப்பினர் சேர்க்கை முகாம்.

8 ஏப்ரல், 2025

மக்கள் நீதி மய்யம் சார்பில் எழும்பூரில் இ-சேவை, உறுப்பினர் சேர்க்கை முகாம்…

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்களது வழிகாட்டுதல்படி, எழும்பூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட அப்பா ராவ் தோட்டம் சாமுண்டீஸ்வரி கோயில் அருகில் இ-சேவைகள், கடனுதவி ஆலோசனை மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.

கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் திரு. சண்முகராஜன் (தரவுகள் மற்றும் ஆய்வு) அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு, மாவட்டச் செயலாளர் திரு. K.சீனிவாசன் அவர்கள் தலைமை வகித்தார். இந்த முகாமில், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டம், வங்கிக் கடனுதவி, தொழிலாளர் நல வாரியத் திட்டம் உள்ளிட்டவை தொடர்பான இ-சேவைகள் வழங்கப்பட்டன. மேலும், கட்சியில் புதிய உறுப்பினர் சேர்க்கையும் நடைபெற்றது. 

முகாமுக்கான ஏற்பாடுகளை மக்கள் நீதி மய்யம் நகரச் செயலாளர் திரு. கமல், வட்டச் செயலாளர்கள் திரு. சிங்காரவேலன், திரு. லாரன்ஸ், திரு. தினேஷ் ஆகியோர் செய்திருந்தனர். 
இதில் இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் திரு. சிலம்பரசன், சமூக ஊடக அணி மாவட்ட அமைப்பாளர் திருமதி. வெங்கடேஸ்வரி, நகரச் செயலாளர் திரு. ராமச்சந்திரன், வட்டச் செயலாளர்கள் திரு. சித்திக் வின்சென்ட், திருமதி சுப்புலட்சுமி, திருமதி. சிந்தனைச் செல்வி, திருமதி. சுதா, திருமதி. ஸ்டெல்லா மணிகண்டன், திரு. சத்தியகுமார் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றுப் பயனடைந்தனர்.

#KamalHaasan
#MakkalNeedhiMaiam

Social Media Link

 Twitter: https://x.com/maiamofficial/status/1909489286052733294

Facebook: https://www.facebook.com/share/p/1AVjmEq3jZ/

Instagram: https://www.instagram.com/p/DILM-_jpglO/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

சமீபத்திய காணொளி







Share this post