சமையல் எரிவாயு (LPG) தட்டுப்பாட்டைக் கண்டித்து, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! மக்கள் நீதி மய்யம் பங்கேற்பு!

16 மார்ச், 2026

சமையல் எரிவாயு (LPG) தட்டுப்பாட்டைக் கண்டித்து, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! மக்கள் நீதி மய்யம் பங்கேற்பு! 

தவறான வெளியுறவுக் கொள்கைகளாலும், போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காததாலும் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு (LPG) தட்டுப்பாட்டைக் கண்டித்தும், மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறி தமிழகத்தைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் ஒன்றிய பாஜக - NDA அரசையும், அதன் கூட்டணியையும் கண்டித்து, 

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்களின் அறிவுறுத்தலின்படி, கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்ற, இந்த ஆர்ப்பாட்டங்களில் திரளாகப் பங்கேற்றனர்.
குறிப்பாக சென்னை - ஆழ்வார்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் துணைத் தலைவர் திரு. A.G. மௌரியா IPS (ஓய்வு) கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். அவருடன் மாவட்டச் செயலாளர்கள் திரு. ஜெ. கதிர் மற்றும் திரு. பாலமுருகன் பங்கேற்றனர். சென்னையின் பிற பகுதிகளில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் வழக்கறிஞர் அணி மண்டல அமைப்பாளர் திரு. சேகர், மாவட்டச் செயலாளர்கள் திரு. உதயகுமார், திரு. சீனிவாசன், திரு. கோவிந்தராஜ், திரு. பாசில், திரு. மாறன், மாவட்டத் துணைச் செயலாளர்கள் திரு. விஸ்வநாதன், திருமதி. விஜி மற்றும் நம்மவர் தொழிற்சங்கப் பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. மாடசாமி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதேபோல கோவை மண்டலத்தில், கோவை தெற்கு, கோவை வடக்கு, கிணத்துக்கடவு, சூலூர், ஈரோடு, திருப்பூர் வடக்கு, பவானி, கோபிச்செட்டிபாளையம், சிங்காநல்லூர், பெருந்துறை, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் ஆதிதிராவிடர் நல அணி மாநிலச் செயலாளர் திரு. சிட்கோ A. சிவா, மகளிர் அணி மாநிலச் செயலாளர் திருமதி. மூகாம்பிகா ரத்தினம், மண்டலச் செயலாளர் திரு. ரங்கநாதன், மண்டல அமைப்பாளர்கள் திரு. தாஜூதீன், மாவட்டச் செயலாளர்கள் திரு. சிவக்குமார், திரு. ஜீவா, திரு. முருகன், திரு. முஜிபுர் ரஹ்மான், மாவட்டத் துணைச் செயலாளர்கள் திரு. கண்ணன் சீதாபதி, திரு. சத்ய நாராயணன், திரு. மாரியப்பன், திரு. சவுந்தர்ராஜன், திரு. VM. சரவணன், திரு. V. பாஸ்கரன் ஆகியோர் பங்கேற்றனர்.

மதுரை மண்டலத்தில், மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, ஒத்தக்கடை ஆகிய இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில், தொழில் முனைவோர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. P. பன்னீர்செல்வம், மகளிர் அணி மாநிலச் செயலாளர் திருமதி R. பத்மா ரவிச்சந்திரன், நற்பணி அணி மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. M.P. செல்லப்பாண்டி, மண்டலச் செயலாளர் திரு. அழகர், நம்மவர் தொழிற்சங்கப் பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. R. சொக்கர், மண்டல அமைப்பாளர் திருமதி P. கலையரசி, மாவட்டச் செயலாளர்கள் திரு. நம்மவர் செந்தில், திரு. கதிரேசன், திரு. I.முத்துகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

திருச்சி மண்டலத்தில் துறையூர், நாகை, ஒரத்தநாடு, சீர்காழி ஆகிய இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில், மண்டலச் செயலாளர் திரு. எம்.என். ரவிச்சந்திரன், மண்டல அமைப்பாளர் திரு. உமாசங்கர், மாவட்டச் செயலாளர் திரு. அனஸ், திரு. சதீஷ்குமார், திரு. எஸ். மனோகர், திரு. அருள் செல்வன், திரு. ரெங்கசாமி ஆகியோர் பங்கேற்றனர்.

நெல்லை மண்டலத்தில், கோவில்பட்டி, தூத்துக்குடி மத்தி, திருச்செந்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, பாளையங்கோட்டை ஆகிய இடங்களில் மண்டல அமைப்பாளர் திரு. ராஜா, மாவட்டச் செயலாளர்கள் திரு. காளிதாஸ், திரு. R. ஜவஹர், திரு. P. விஜயகுமார், மாவட்டத் துணைச் செயலாளர் திரு. S. சத்ய தவசு ஆகியோர் கலந்துகொண்டனர்.

சேலம் மண்டலத்தில், தர்மபுரி, குமாரபாளையம் ஆகிய இடங்களில் மண்டலச் செயலாளர் திரு. கே. காமராஜ், மாவட்டச் செயலாளர் திரு. சரவணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டங்களில், மாவட்ட, ஒன்றிய, நகர, வட்ட, கிளை நிர்வாகிகள், நம்மவர் தொழிற்சங்கப் பேரவையினர், சார்பு அணியினர், மய்யத்தின் தொண்டர்கள் திரளாக ஒன்றிணைந்து, ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோதப் போக்கிற்கு எதிராக மக்கள் நீதி மய்யத்தின் வலிமையான எதிர்ப்பை உறுதி செய்தனர்.

#KamalHaasan 
#KamalHaasan_MP 
#MakkalNeedhiMaiam

Social Media Link

X: https://x.com/maiamofficial/status/2033526942327361743?s=20

Facebook: https://www.facebook.com/share/p/1Aq2QaXZ34/

Instagram: https://www.instagram.com/p/DV8lGuxmj9b/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

சமீபத்திய காணொளி







Share this post