மக்கள் நீதி மய்யம் மகளிரணி மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் மதுரை மல்லிகை இணைந்து நடத்திய, மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம்.

4 நவம்பர், 2024

தலைவர் நம்மவர் திரு. @ikamalhaasan அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, மக்கள் நீதி மய்யம் மகளிரணி மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் மதுரை மல்லிகை இணைந்து நடத்திய, மாபெரும் இலவச பொது மருத்துவ முகாமை, மகளிரணி மதுரை மண்டல அமைப்பாளர் திருமதி. பத்மா ரவிச்சந்திரன் மய்யப்பெண் திருமதி. கலையரசி, வட அமெரிக்கா கமல் ஹாசன் நற்பணி இயக்கத்தை சார்ந்த திருமதி. பத்மாவதி, திருமதி. சுகன்யா ஹாரீஸ் ஆகியோரின் முன்னேற்பாட்டில், மதுரை மண்டலச் செயலாளர் திரு.M.அழகர் அவர்கள் துவக்கி வைத்தார்.

இம்மருத்துவ முகாமில் கண், காது, மூக்கு, தொண்டை, பல், தோல், போன்றவற்றிற்கும், குறிப்பாக பெண்களுக்கான மார்பக புற்றுநோய் குறித்த பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.

நிகழ்வினை மகளிர் அணியின் நிர்வாகிகள் திருமதி.சுகுணா, திருமதி.உமையாள், திருமதி.உமாராணி, திருமதி.மணிமாலா. திருமதி.லீலா, திருமதி.மணிமேகலை, திருமதி.நிரோஸ்பானு, திருமதி.ஜோதி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தார்கள்.

#KamalHaasan
#MakkalNeedhiMaiam

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1853479196431147170

Facebook: https://www.facebook.com/share/p/15D5pp1ZRE/

Instagram: https://www.instagram.com/p/DB9OtfAyS_E/?utm_source=ig_web_copy_link

சமீபத்திய காணொளி







Share this post