சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தத்தை எதிர்த்து, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நவ. 11-ல் கண்டன ஆர்ப்பாட்டம்!அனைவரும் திரளாகப் பங்கேற்க மக்கள் நீதி மய்யம் அழைப்பு!

8 நவம்பர், 2025

சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தத்தை எதிர்த்து, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நவ. 11-ல் கண்டன ஆர்ப்பாட்டம்!

அனைவரும் திரளாகப் பங்கேற்க மக்கள் நீதி மய்யம் அழைப்பு!

(09-11-2025)

தமிழ்நாட்டில் பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்த போதிலும் சிறப்புத் தீவிர வாக்காளர் திருத்தப் (எஸ்ஐஆர்) பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. 

2026-ல் தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்த பிறகு, முறையாகவும், முழுமையாகவும் இந்த திட்டத்தை செயல்படுத்தலாம் என்ற கோரிக்கையைக்கூட இந்திய தேர்தல் ஆணையம் புறக்கணித்துவிட்டது. இதைக் கண்டித்தும், எஸ்ஐஆர் பணிகளை உடனடியாக நிறுத்துமாறும் வலியுறுத்தியும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாவட்டத் தலைநகரங்களில், 
வரும் 11.11.2025 அன்று காலை 10 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், நமது கட்சியினர் திரளாக கலந்துகொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

இத்துடன் அனைத்துக்கட்சி கூட்டத்தில் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் ஆற்றிய உரை இணைக்கப்பட்டுள்ளது. 

கண்டன ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றும் நமது கட்சி நிர்வாகிகள் தலைவரின் உரையையொட்டி தங்கள் உரையை அமைத்துக்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

-தலைமை நிலையம்,
மக்கள் நீதி மய்யம்.

@ikamalhaasan

#Kamalahaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam

Social Media Link

X: https://x.com/maiamofficial/status/1987531475592622162?s=20

Facebook: https://www.facebook.com/share/p/17fQfCFhQk/

Instagram: https://www.instagram.com/p/DQ1uSJ_iVpo/?utm_source=ig_web_copy_link&igsh=Zmg1encwejVudnZm

சமீபத்திய காணொளி







Share this post