கரூர் துயரத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு மநீம தலைவர் சார்பில் ரூ.1 லட்சம் நிவாரணம்.

8 அக்டோபர், 2025
 
S

கரூர் கூட்ட நெரிசலில் தங்களது இன்னுயிரை நீத்தவர்களின் குடும்பத்தாரை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், மாநிலங்களவை உறுப்பினர் திரு. கமல் ஹாசன் அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் சொன்னதோடு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணமும் அளித்தார்.

கரூர் பயணத்தின் போது சந்திக்க இயலாமல் போன, சேலம் பகுதியை சார்ந்த குடும்பங்களுக்கு, தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின் படி கட்சியின் சேலம் மண்டலச் செயலாளர் திரு. காமராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் கமல் பண்பாட்டு மையம் சார்பாக தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை நேற்று (08/10/2025) நேரில் வழங்கினர்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான காசோலையை வழங்குகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்டச் செயலாளர் திரு. நைனார், மாவட்ட அமைப்பாளர்கள் திரு. ம.விக்னேஷ், திரு. M.பாண்டியன், திரு. G.சதீஷ், திரு. V.சந்தோஷ், திரு. S.வடிவேலன், மாவட்டத் துணைச் செயலாளர் திரு. D. விஜயகுமார், திரு. சந்துரு, திரு. முருகன், திரு. ராமச்சந்திரன், மாவட்டத் துணை அமைப்பாளர் திரு. V.சந்தோஷ், நம்மவர் தொழிற்சங்க பேரவையின் மாநில பொதுச் செயலாளர் திரு. V. ரவிச்சந்திரன் உள்ளிட்டோருடன் திரு. குமரன், திரு. சரவணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#KarurTragedy
#KarurStampede

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1976233700409987441

Facebook: https://www.facebook.com/share/p/1JpdupAHVC/

Instagram: https://www.instagram.com/p/DPlcrtbiage/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

சமீபத்திய காணொளி







Share this post